என் சகோதரன் அனானியிடமும் அரண்மனைத் தலைவன் அனானியாவிடமும் யெருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் இந்த அனானியா மற்றவர்களைவிட நேர்மையுள்ளவன்; தெய்வ பயம் கொண்டவன்.
நான் அவர்களைப் பார்த்து, "வெயில் வரும் வரை யெருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம். சூரியன் இன்னும் உச்சியில் இருக்கும் போதே கதவுகளை மூடித் தாழிட வேண்டும். யெருசலேம் மக்களுள் காவலரை ஏற்படுத்தி அவர்கள் ஒவ்வொருவரும் முறைப்படி தத்தம் வீடுகளுக்கு எதிராகக் காவல் புரியுமாறு செய்ய வேண்டும்" என்று சொன்னேன்.
இந்நிலையில் கடவுளின் ஏவுதலின்படி, பெரியோர், ஆளுநர்கள், பொதுமக்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டி அவர்களைக் கணக்கெடுத்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த முதற் கூட்டத்தினரின் குடும்ப வரிசைப் பதிவேடு ஒன்று அகப்பட்டது. அதில் எழுதியிருந்ததாவது:
அன்றியும் தெல்மலா, தெல்கர்சா, கெரூப், அத்தோன், எம்மேர் என்ற இடங்களிலிருந்து வந்தவர்களும், தாங்கள் இஸ்ராயேலின் வழி வந்தவர் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தவர்களும் வருமாறு:
குருக்களிலே ஹபியா மக்கள், அக்கோஸ் மக்கள், பெர்செலாயி மக்கள்- இவன் கலாதியனான பெர்செலாயின் புதல்வியரில் ஒருத்தியை மணந்து கொண்டதனால் அவர்களின் பெயரால் பெர்செலாயி என அழைக்கப்பட்டான்- ஆகிய அனைவரும்
அவர்களைத் தவிர, அவர்களின் வேலைக்காரரும் வேலைக்காரிகளும் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு பேர். மற்றும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் இருந்தனர்.
குலத் தலைவர்களிலே பலர் ஆலய வேலைக்காகக் கொடுத்த காணிக்கைகளின் கணக்காவது: ஆளுநர் கருவூலத்திற்கு ஆயிரம் திராக்மா என்ற பொற்காசுகளையும் ஐம்பது பாத்திரங்களையும் ஐந்நூற்று முப்பது குருவுடைகளையும் தந்தார்.
குலத் தலைவர்களில் வேறு சிலர் ஆலய வேலை நிதிக்கென்று இருபதாயிரம் திராக்மா என்ற பொற் காசுகளையும், இரண்டாயிரத்திருநூறு மினா என்ற வெள்ளிக் காசுகளையும் தந்தனர்.