Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Nehemiah Chapters

Nehemiah 13 Verses

1 அப்பொழுது அவர்கள் மக்கள் கேட்கும்படி மோயீசனின் நூலைப் படித்தனர். அதில் எழுதப் பட்டிருந்ததாவது: "அம்மோனியரும் மோவாபியரும் எந்தக் காலத்திலுமே கடவுளின் சபைக்குள் நுழையக் கூடாது.
2 ஏனெனில் அந்த இனத்தார் இஸ்ராயேல் மக்களுக்கு அப்பமும் நீரும் கொடுக்க மறுத்ததோடு, அவர்களைச் சபிக்கும்படி பாலாம் என்பவனுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். எங்கள் கடவுளோ அச்சாபத்தை ஆசி மொழியாக மாற்றிவிட்டார்" என்பதாம்.
3 மக்கள் அதைக் கேட்டவுடன் தம் நடுவே இருந்த புறவினத்தார் அனைவரையும் வெளியேற்றினார்கள்.
4 ஆண்டவரின் ஆலயக் கருவூலங்களின் கண்காணிப்பாளராக குரு எலியாசிப் நியமிக்கப்பட்டார். இவர் தொபியாசுக்கு நெருங்கின உறவினர்.
5 எனவே அவர் தொபியாசுக்குப் பெரியதோர் அறையைக் கொடுத்திருந்தார். அங்குதான் இதற்கு முன் காணிக்கைகளும் சாம்பிராணியும் தட்டுமுட்டுகளும், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றின் பத்திலொரு பாகமும், லேவியர், பாடகர், வாயிற்காவலர் முதலியவர்களின் பங்குகளும் குருக்களைச் சேர வேண்டிய முதற் பலன்களும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன.
6 இதெல்லாம் நடந்தபோது நான் யெருசலேமில் இல்லை; ஏனெனில் பபிலோனிய அரசரான அர்தக்சேர்செசின் முப்பத்திரண்டாம் ஆண்டில் நான் அரசரிடம் சென்றிருந்தேன். சில நாட்களுக்குப் பிறகு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு,
7 யெருசலேமுக்குத் திரும்பி வந்தேன். அப்போது கடவுள் ஆலயத்தின் அறையைத் தொபியாசுக்குத் தங்குமிடமாகக் கொடுத்திருந்ததையும் அதன்மூலம் எலியாசிப் இழைத்திருந்த தீங்கையும் அறிய வந்தேன்.
8 இது பெரும் தீச்செயலாக எனக்குத் தோன்றிற்று. ஆதலால் அறையிலிருந்து தொபியாசின் தட்டுமுட்டுகளை வெளியே எறிந்து விட்டேன்.
9 மேலும் அறைகளைச் சுத்தம் செய்யக் கட்டளையிட்டேன்; அதுவும் நடந்தேறியது. பின்னர் ஆலயத் தட்டுமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்குத் திரும்பக் கொண்டுவந்து வைத்தேன்.
10 மேலும் லேவியர்களுக்குச் செல்லவேண்டிய வருமானம் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றும், லேவியரும் பாடகரும் திருப்பணி புரிந்து வந்த அனைவரும் தத்தம் நாட்டுக்கு ஓடிப்போயிருந்தனர் என்றும் அறி வந்தேன்.
11 அப்போது நான் அலுவலர்களைக் கடிந்துகொண்டேன். "ஆண்டவரின் ஆலயம் கைவிடப்பட்டுக் கிடப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டேன். பின்னர் அவர்களை வரவழைத்து அவர்கள் தத்தம் அலுவல்களைச் செய்யுமாறு பணித்தேன்.
12 அதன் பின் யூதா மக்கள் எல்லாரும் திரும்பவும் கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றின் பத்ததிலொரு பாகத்தைக் கருவூல அறைகளுக்குக் கொண்டுவரத் தொடங்கினர்.
13 குரு செலேமியாவையும் மறைநூல் அறிஞன் சாதோக்கையும், லேவியனான பதாயாசையும், இவர்களுக்குத் துணையாக மாத்தானியாவின் மகன் சக்கூரின் புதல்வன் கானானையும் கருவூல அறைகளுக்குக் கண்காணிப்பாளராய் நியமித்தேன்; ஏனெனில் அவர்கள் நேர்மையானவர்கள். தங்கள் சகோதரருக்குச் சேரவேண்டிய பங்குகளை அவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதே அவர்களது அலுவல்.
14 என் கடவுளே, இதன் பொருட்டு என்னை நினைவுகூர்ந்தருளும். என் கடவுளின் ஆலயத்திற்காகவும் அதன் திருப்பணிக்காவும் அடியேன் செய்துள்ள நற்செயல்களை மறவாதேயும்.
15 அக்காலத்தில் யூதா மக்கள் ஓய்வுநாளில் திராட்சை ஆலைகளில் வேலை செய்வதையும், வேறு சிலர் அரிக்கட்டுகளைச் சுமந்து போகிறதையும், இன்னும் சிலர் திராட்சை இரசம், திராட்சைப்பழம், அத்திப்பழம் முதலியவற்றைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு யெருசலேமுக்குக் கொண்டு செல்வதையும் கண்டேன். எனவே ஓய்வுநாளில் வியாபாரம் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தேன்.
16 யெருசலேமில் வாழ்ந்து வந்த தீர் நகர வணிகர் சிலர் மீன் முதலிய பொருட்களைக் கொண்டு வந்து அவற்றை யூதா மக்களுக்கு ஓய்வுநாளில் விற்று வந்தார்கள்.
17 அதைக் கண்டு நான் யூதாத் தலைவர்களைக் கடிந்து கொண்டேன். "நீங்கள் ஓய்வுநாளை அனுசரியாது இவ்வாறு பாவம் செய்யலாமா?
18 நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட தீச்செயல்களைச் செய்ததால் அன்றோ நம் கடவுள் நம் மேலும் இந்நகர் மேலும் இத்தீமை எல்லாம் வரச் செய்தார்? நீங்களும் ஓய்வுநாளை மீறுவதால் இஸ்ராயேல் மேல் அவர் கொண்டுள்ள கோபத்தை அதிகப்படுத்துகிறீர்களே" என்று சொன்னேன்.
19 மேலும் ஓய்வுநாளில் யெருசலேம் வாயில்கள் திறந்திருக்கக் கண்டு, "மாலை நேரத்தில் கதவுகளை அடைத்துவிட வேண்டும்; ஓய்வுநாள் முடியும் வரை அவற்றைத் திறக்கக் கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டேன். அத்தோடு ஓய்வுநாளில் எவரும் உள்ளே சுமைகளைக் கொண்டு வராதபடி, என் வேலைக்காரரில் சிலரை வாயிலருகில் நிறுத்தி வைத்தேன்.
20 எனவே பற்பல சரக்குகளையும் விற்கிற வியாபாரிகள் யெருசலேமுக்கு வெளியே ஓரிருமுறை தங்கியிருந்தனர்.
21 நான் அவர்களைக் கண்டித்து, "நீங்கள் மதில் அருகே ஏன் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களானால் உங்களை நான் தண்டிப்பேன்" என்று அவர்களுக்குச் சொன்னேன். ஆகையால் அந்நாள் தொடங்கி அவர்கள் ஓய்வுநாளில் வராமலிருந்தனர்.
22 பின்னர், "ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் அனுசரிக்கும்படி உங்களைத் தூய்மைப் படுத்திய பின் வாயிலைக் காக்க வரவேண்டும்" என்று நான் லேவியர்களுக்குச் சொன்னேன். இதன் பொருட்டும், என் கடவுளே, நீர் என்னை நினைத்தருளும். நீர் பேரிரக்கம் கொண்டவராகையால் என் மீது இரக்கமாயிரும்.
23 ஆயினும் அக்காலத்தில்கூட ஆஜோத், அம்மோன், மோவாப் முதலிய புறவினப் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன்.
24 அவர்கள் பிள்ளைகளால் யூதாமொழி பேச இயலவில்லை. மாறாக யூதாமொழியையும் ஆஜோத் மொழியையும் அவர்கள் கலந்தே பேசி வந்தனர்.
25 நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். அவர்களில் சிலரை அடித்து அவர்களது தலைமயிரைச் சிரைத்து விட்டேன். இனி புறவினத்தாரிடமிருந்து பெண்களைக் கொள்ளவோ அவர்களுக்குப் பெண் கொடுக்கவோ மாட்டோம் என்று கடவுள் மேல் அவர்கள் ஆணையிடச் செய்தேன்.
26 அவர்களை நோக்கி, "இஸ்ராயேலின் அரசரான சாலமோன் கெட்டது இதனாலன்றோ? உண்மையாகவே எல்லா மக்களிலும் அவருக்கு இணையான அரசர் யாரும் இருந்திலர். கடவுள் அவருக்கு அன்புசெய்து அவரை இஸ்ராயேலர் அனைவருக்கும் அரசராக ஏற்படுத்தியிருந்தார். அப்படியிருந்தும் புறவினப் பெண்கள் அவரைப் பாவத்திற்கு உட்படுத்தினர்.
27 அவரைப் போல் நாமும் கடவுளின் கட்டளையை மீறி இப்பெரும் தீங்கிற்கு அஞ்சாது புறவினப் பெண்களை மணக்கலாமா?" என்றேன்.
28 பெரிய குரு எலியாசிபின் மகன் யொயியாதாவுடைய புதல்வர்களில் ஒருவன் கோரோனித்தனான சனபல்லாதின் மருமகனாய் இருந்தான். எனவே அவனை என்னிடமிருந்து துரத்தி விட்டேன்.
29 என் கடவுளாக ஆண்டவரே, குருத்துவத்தை மாசு படுத்துகிறவர்களையும், குருக்கள், லேவியர்களின் ஒழுங்கு முறைகளை அழிக்கத் தேடுகிறவர்களையும் நீர் தண்டிக்க மறவாதேயும்.
30 இவ்வாறு அவர்கள் நடுவினின்று நான் எல்லாப் புறவினத்தாரையும் நீக்கி, குருக்களையும் லேவியர்களையும் அவரவரது ஊழியத்தில் நிலைநிறுத்தினேன்.
31 விறகுகளையும் முதற்பலன்களையும் குறிக்கப்பட்ட காலத்தில் கொடுக்கும்படி ஒழுங்கு செய்தேன். என் கடவுளே எனக்கு நன்மை செய்ய நினைத்தருளும். ஆமென்.
×

Alert

×