மக்கள் தலைவர்கள் யெருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒரு பகுதியினர் யெருசலேமிலும், ஏனையோர் மற்ற நகரங்களிலும் வாழ வேண்டியிருந்தது. இதற்காகச் சீட்டுப்போட்டனர்.
பின் கூறப்படும் மக்கள் தலைவர்கள் யெருசலேமில் வாழ்ந்து வந்தார்கள். யூதாவின் நகரங்களில் இஸ்ராயேலரும் குருக்களும் லேவியரும் ஆலய ஊழியரும் சாலமோனுடைய ஊழியர்களின் புதல்வர்களும் தத்தம் சொந்த நகரிலும் மனையிலும் வாழ்ந்து வந்தார்கள்.
யூதா புதல்வரில் சிலரும் பென்யமீன் புதல்வரில் சிலரும் யெருசலேமில் வாழ்ந்து வந்தனர். யூதாவின் புதல்வர்களில் அசியாவின் மகன் அத்தாயாஸ்- அசியாம் சக்காரியாவின் மகன்; இவன் அமாரியாவின் மகன்; இவன் ஜப்பாத்தியாவின் மகன்; இவன் பாரேசின் புதல்வர் வழியில் வந்த மலலேயலின் மகன்.
பென்யமீன் புதல்வருள்: (முதலில்) செல்லும்- இவன் மொசொல்லாமுக்கும், இவன் யோவேத்துக்கும், இவன் பதாயியாவுக்கும், இவன் கொலாயியாவுக்கும், இவன் மாசியாவுக்கும், இவன் ஈத்தேயலுக்கும், இவன் இசாயியாவுக்கும் பிறந்தவர்கள்.
இல்கியாசின் மகன் சாராயியாவுமாம்- இல்கியாஸ் மொசொல்லாமுக்கும், மொசொல்லாம் சாதோக்குக்கும், சாதோக் மேராயோத்துக்கும், மேராயோத் கடவுளின் ஆலய மேற்பார்வையாளனான அக்கித்தோபுக்கும் பிறந்த புதல்வர்கள்.
ஆலயத்திலே திருப்பணி செய்து வந்த அவர்களின் சகோதரர் எண்ணுற்று இருபத்திரண்டு பேர். இன்னும் எரோகாமின் மகன் ஆதாயா- எரோகாம் பெலேலியாவுக்கும், பெலேலியா அம்சிக்கும், அம்சி சக்கரியாசுக்கும், சக்கரியாஸ் பெசூருக்கும், பெசூர் மேல்கியாசுக்கும் பிறந்த புதல்வர்கள்.
குலத் தலைவர்களான மெல்கியாசின் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர். மேலும் ஆஸ்ராயேலின் மகன் அமசாயீ- ஆஸ்ராயேல் அகாசியிக்கும், அகாசியி மொசொல்லா மோத்துக்கும், மொசொல்லாமோத் எம்மேருக்கும் பிறந்த புதல்வர்.
ஆண்டவருக்கு நன்றிப்பண் இசைப்போருக்குத் தலைவனும், அசாபின் மகனான செபெதேயீயின் புதல்வன் மிக்காவுடைய மகனான மத்தானியாவும், இவனுடைய சகோதரர்களில் இவனுக்கு அடுத்த இடம் வகித்து வந்த பெக்பேசியாவும், இதித்தூனின் மகனான கலாதின் புதல்வன் சமுவாபுக்குப் பிறந்த ஆப்தாவும் ஆக,
யெருசலேமில் வாழ்ந்து வந்த லேவியருக்குப் பானியின் மகன் அசசீ தலைவனாக இருந்தான்- பானி கசாபியாவின் மகன்; இவன் மத்தானியாவின் மகன்; இவன் ஆலயப் பாடகர்களான ஆசாபின் புதல்வர்கள் வழியில் வந்த மிக்காவின் மகன்.
அன்றியும் யூதாவின் மகனான ஜாராவின் புதல்வர்கள் வழியில் வந்த மெசெசபலின் மகன் பாத்தாகியா மக்களுடைய எல்லாக் காரியங்களின் பொறுப்பும் ஏற்று அரசருக்கு உதவி செய்து வந்தான்.
நாடெங்கணும் வாழ்ந்து வந்த யூதாவின் மக்களில் பலர் காரியத்தார்பெயிலும் அதை அடுத்த சிற்றூர்களிலும், திபோனிலும் இதைச் சேர்ந்த ஊர்களிலும், கப்சயேலிலும் இதன் ஊர்களிலும்,
ஜனோவாயிலும் ஒதொல்லாமிலும் இவற்றைச் சேர்ந்த ஊர்களிலும், லாக்கீசிலும் இதன் வயல்களிலும், அசேக்காவிலும் இதைச் சேர்ந்த ஊர்களிலும் பெர்சபே முதல் என்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.