English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Nahum Chapters

Nahum 2 Verses

1 உன்னைச் சிதறடிக்கிறவன் உனக்கெதிராய் வருகிறான்; கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து, வழிகளில் காவல் வீரர்களை இருக்கச் செய்; உன் இடைகளை விரிந்து கட்டிக்கொள், உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.
2 (இஸ்ராயேலின் மாட்சிமை போலவே யாக்கோபின் மாட்சிமையை ஆண்டவர் மறுபடி நிலை நாட்டுகிறார்; கொள்ளைக்காரர்கள் அவற்றைக் கொள்ளையடித்தனர், அவற்றின் கிளைகளை அவர்கள் முறித்துப் போட்டனர்.)
3 அவனுடைய வலிய வீரர்களின் கேடயங்கள் சிவப்பானவை, அவனுடைய போர்வீரர்கள் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்; போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கிறது, குதிரை வீரர்கள் போருக்குத் துடிக்கின்றனர்.
4 தேர்கள் தெருக்களில் மூர்க்கமாய்த் தாக்குகின்றன, பொதுவிடங்களில் அவை அங்குமிங்கும் ஓடுகின்றன; தீப்பந்தங்களைப் போலச் சுடர் விடுகின்றன, மின்னலைப் போலப் பாய்கின்றன.
5 போர்த்திறம் வாய்ந்த வீரர்களைக் கூப்பிடுகிறான், போகும் போது இடறுகிறார்கள்; கோட்டை மதில் நோக்கி விரைந்தோடுகின்றனர், காப்புக் கருவி அமைத்தாயிற்று.
6 ஆற்றோரத்து வாயிற் கதவுகள் திறக்கப்பட்டன, அரண்மனை எங்கும் ஒரே திகில்.
7 அரண்மனைத் தலைவி சிறைப்பட்டாள், நாடு கடத்தப்படுகிறாள், அவளுடைய பணிப்பெண்கள் புலம்புகிறார்கள்; புறாக்களைப் போலப் பெருமூச்செறிந்து தங்கள் மார்பில் அறைந்து கொள்ளுகிறார்கள்.
8 தண்ணீர் தேங்கி நிற்காமல் ஓடிவிடும் குளத்துக்கு ஒப்பாயிற்று நினிவே நகரம்; "நில்லுங்கள், நில்லுங்கள்!" எனக் கூவுகிறார்கள், ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை.
9 வெள்ளியைக் கொள்ளையடியுங்கள், பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்; கருவூலங்களுக்கு அளவேயில்லை, விலையுயர்ந்த பொருட்களும் குவிந்து கிடக்கின்றன.
10 கொள்ளை! கொலை! கொடுமை! உள்ளம் சோர்ந்து விட்டது, தொடைகள் நடுங்குகின்றன. திகில் அனைவரின் அடிவயிற்றையும் கலக்குகிறது, முகங்கள் எல்லாம் வெளிறிப் போகின்றன.
11 சிங்கங்களின் குகை எங்கே இருக்கிறது? சிங்கக்குட்டிகளின் உறைவிடம் எங்கே? சிங்கம் வெளியேறும் போது, பெண் சிங்கமும் குட்டிகளும் யாருடைய தொந்திரவுமின்றி அங்கே இருந்தன.
12 தன் குட்டிகளுக்கும், பெண் சிங்கங்களுக்கும் தேவையான அளவு இரையை பீறிக்கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் சிங்கம் நிரப்பிற்று.
13 சேனைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேள்: இதோ, உனக்கெதிராக நாம் எழும்புவோம், உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவோம், உன் இளஞ் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும், உனக்கு நாட்டில் இரை இல்லாதபடி செய்வோம், உன் தூதர்களின் குரல் இனிக் கேட்கப்பட மாட்டாது.
14 தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும்.
15 அடுத்திருப்பவர் மீது கொண்ட சினத்தினால் அவர்களைக் குடிவெறியர்களாக்கி அவர்களது திறந்த மேனியின் அலங்கோலத்தைக் காணும்வரை குடிக்கச் செய்பவனுக்கு ஐயோ கேடு!
16 நீ மேன்மை அடையாது ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்; நீயும் குடி, குடித்துவிட்டுத் தள்ளாடு; ஆண்டவரின் வலக்கையிலுள்ள தண்டனைக்கலம் உன்னிடம் திரும்பி வரும்; அப்போது உன் மேன்மை மானக்கேடாய் மற்றும்.
17 லெபனோனுக்கு நீ செய்த கொடுமை உன் மீது வந்து விழும்; நீ வெட்டி வீழ்த்திய விலங்குகளே உன்னை நடுக்கமுறச் செய்யும்; ஏனெனில் நீ மனித இரக்கத்தைச் சிந்தினாய்; நாட்டுக்கும் நகர்க்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும் கொடுமைகளை செய்தாய்.
18 சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே! ஆயினும் சிற்பி தான் செதுக்கிய ஊமைச் சிலைகளாகிய கைவேலைகளிலே நம்பிக்கை வைக்கிறான்.
19 மரக்கட்டையிடம், 'விழித்தெழும்' என்றும் ஊமைக் கல்லிடம் 'எழுந்திடும்' என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ கேடு! அவை ஏதேனும் வெளிப்பாடு அருள முடியுமோ? பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!
20 ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்; அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மௌனம் காப்பதாக.
×

Alert

×