உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதிலும் எங்கெங்கு இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள்நினைவாகக் கூறப்படும்" என்றார்.
புளியாத அப்பத் திருவிழாவின் முதல்நாள் சீடர் இயேசுவை அணுகி, "நீர் பாஸ்கா உணவை உண்ண உமக்கு நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர் ?" எனக் கேட்டனர்.
இயேசு கூறியது: "நகரத்தில் இன்னாரிடம் போய், ' என் நேரம் அருகிலுள்ளது; என் சீடருடன் உன் வீட்டில் பாஸ்கா கொண்டாடுவேன் ' எனப் போதகர் கூறுகிறார் என்று சொல்லுங்கள்."
மனுமகன் தம்மைப்பற்றி எழுதியிருக்கிறபடியே போகிறார். மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்றார்.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, "இன்றிரவே என்னைக்குறித்து நீங்கள் அனைவரும் இடறல்படுவீர்கள். ஏனெனில், ' மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறிப்போம் ' என எழுதியிருக்கிறது.
பின்னர், இயேசு அவர்களுடன் கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வந்தார். வந்து சீடர்களிடம், "நான் அங்கே சென்று செபிக்குமளவும் இங்கே இருங்கள்" என்று சொல்லி, ஃ
சற்று அப்பால்போய், குப்புறவிழுந்து, "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று செபித்தார்.
அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே இதோ! பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் வந்தான். தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் அனுப்பிய பெருங்கூட்டம் ஒன்று வாள்களோடும் தடிகளோடும் அவனுடன் வந்தது.
அவ்வேளையில் இயேசு, மக்கள்திரளை நோக்கி, "நீங்கள் கள்ளனைப் பிடிக்க வருவதுபோல வாளோடும் தடியோடும் என்னைப் பிடிக்க வந்தீர்களோ ? நாள்தோறும் கோவிலில் அமர்ந்து போதித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை" என்று சொன்னார்.
இயேசுவோ பேசாதிருந்தார். தலைமைக் குரு அவரை நோக்கி, உயிர் உள்ள கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னைக் கேட்கிறேன்: "நீ கடவுளின் மகனான மெசியாவோ ?" என்றார்.
இயேசு, "நீரே சொன்னீர். மேலும் மனுமகன் வல்லமையுள்ள இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வான மேகங்கள்மீது வருவதை நீங்கள் இனிக் காண்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
அப்போது தலைமைக்குரு தம்முடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "இவன் தேவ தூஷணம் சொன்னான். நமக்கு இன்னும் சாட்சிகள் எதற்கு ? இதோ! இப்பொழுது தேவ தூஷணம் கேட்டீர்களே.
அவர் அங்கிருந்து வாயிலருகே வந்தபொழுது வேறோர் ஊழியக்காரி அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்தவர்களிடம், "இவனும் நாசரேத்தூர் இயேசுவோடு இருந்தான்" என்று கூறினாள்.
சிறிது நேரத்திற்குப் பின்பு, அங்கிருந்தவர்கள் அணுகி, "உண்மையாகவே நீயும் அவர்களுள் ஒருவன்தான்; ஏனெனில், உன் பேச்சே உன்னைக் காட்டிவிடுகிறது" என்று இராயப்பரிடம் கூறினார்கள்.