ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லெகேமே, யூதாவின் நகரங்களிலே நீ சிறியதே அல்லை. ஏனெனில், என் மக்கள் இஸ்ராயேலை மேய்க்கவேண்டிய தலைவர் உன்னிடமிருந்தே தோன்றுவார் ' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.
பின்பு அவர்களைப் பெத்லெகேமுக்குப் போகச் சொல்லி, "நீங்கள் சென்று குழந்தையைப்பற்றிக் கருத்தாய் ஆராய்ந்து பாருங்கள்; அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். நானும் போய் அவரை வணங்கவேண்டும்" என்றான்.
அவர்கள் அரசன் கூறியதைக் கேட்டுப் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழக்கண்ட அந்த விண்மீன், குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை, அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
வீட்டிற்குள் போய், பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர். தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.
அவர்கள் சென்றபின், இதோ! ஆண்டவரின் தூதர் சூசைக்குக் கனவில் தோன்றி, "எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" என்றார்.
ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.
பின்னர் ஏரோது, ஞானிகள் தன்னை ஏமாற்றியதைக் கண்டு, கடுங்கோபமுற்று, ஆட்களை அனுப்பி, ஞானிகளிடம் கருத்தாய்க் கேட்டறிந்த காலத்தின்படி பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்.
"எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில், குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டனர்" என்றார்.
ஆனால் யூதேயாவிலே, அர்கெலாவு தன் தந்தை ஏரோதிற்குப் பதிலாக அரசாள்வதாகக் கேள்வியுற்று அங்குச் செல்ல அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டுக்குச் சென்றார்.
நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் என்றார்.
ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிருந்தார். இவ்வாறு, 'நசரேயன்' என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.