மேலும் அவர்களை நோக்கி, "உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு வல்லமையோடு வந்திருப்பதைக் காணும்வரை இங்கிருப்பவர்களுள் சிலர் சாவுக்குள்ளாக மாட்டார்கள்" என்றார்.
ஆறு நாட்களுக்குப் பின் இயேசு இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் அழைத்து ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையில் ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்குமுன் உருமாறினார்.
இராயப்பர் இயேசுவை நோக்கி, "ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்" என்றார்.
மலையினின்று அவர்கள் இறங்கும்பொழுது, மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்போதன்றி, அவர்கள் கண்டவற்றை ஒருவருக்கும் வெளிப்படுத்தக்கூடாது என்று அவர்அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
அவர், "எலியாஸ் முதலில் வந்து எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தத்தான் போகிறார். ஆனால் மனுமகன் பாடுகள் பல படவும், புறக்கணிக்கப்படவும் வேண்டுமென எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?
ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாஸ் வந்தாயிற்று. அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளபடி அவர்கள் தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள்" என்றார்.
அது எங்கே அவனை ஆட்கொள்கிறதோ அங்கே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரைத்தள்ளிப் பல்லைக்கடித்து விறைத்துப்போகிறான். அதை ஓட்டும்படி உம் சீடரைக் கேட்டேன். அவர்களால் முடியவில்லை."
இவனைத் தொலைக்க அந்தப் பேய் அடிக்கடி நீரிலும் நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்யக்கூடுமானால் எங்கள்மேல் மனமிரங்கி உதவிபுரியும்" என்றான்.
கூட்டம் தம்மிடம் ஓடி வருவதைக் கண்டு, இயேசு அசுத்த ஆவியைக் கடிந்து, "ஊமைச் செவிட்டுப் போயே, உனக்குக் கட்டைளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ, மீண்டும் இவனுள் நுழையாதே" என்றார்.
ஏனெனில், "மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். கொல்லப்பட்டு மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" என்று தம் சீடருக்குப் போதிக்கலானார்.
அப்போது அவர் அமர்ந்து பன்னிருவரையும் அழைத்து, "ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்" என்றார்.
"இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளும் எவனும் என்னையன்று, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்" என்றார்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(49) "உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு உவர்ப்பு அற்றுப்போனால் எதைக்கொண்டு அதற்குச் சாரம் ஏற்றுவீர்கள்? உங்களுக்குள் உப்பு இருக்கட்டும். ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்."