Indian Language Bible Word Collections
Mark 3:18
Mark Chapters
Mark 3 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Mark Chapters
Mark 3 Verses
1
மீண்டும் செபக்கூடத்திற்கு வந்தார். அங்கே சூம்பிய கையன் ஒருவனிருந்தான்.
2
அவர்மேல் குற்றஞ்சாட்டும்படி, ஓய்வுநாளில் குணமாக்குவாராவென்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.
3
அவரோ சூம்பியகையனை நோக்கி, "வந்து நடுவிலே நில்" என்றார்.
4
பின் அவர்களிடம் "ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" என்று கேட்டார்.
5
அவர்களோ பேசாதிருந்தனர். அவர் சினத்தோடு அவர்களைச் சுற்றிப் பார்த்து, அவர்களது மனக் கடினத்தைக் கண்டு வருந்தி, அவனை நோக்கி, "கையை நீட்டு" என்றார். நீட்டினான்; கை குணமாயிற்று.
6
பரிசேயரோ வெளியே போய், ஏரோதியரோடு சேர்ந்து அவரை எப்படித் தொலைக்கலாமென்று அவருக்கெதிராக உடனே ஆலோசனை செய்தனர்.
7
இயேசு தம் சீடருடன் அங்கிருந்து விலகிக் கடலோரம் சென்றார்.
8
கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் செய்ததெல்லாம் கேள்வியுற்று யூதேயா, யெருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் வட்டாரம் ஆகிய இடங்களிலிருந்தும் திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.
9
கூட்டமாயிருக்கவே, அவர்கள் தம்மை நெருக்காதபடி தமக்குப் படகு ஒன்றைத் தயாராக வைத்திருக்குமாறு சீடருக்குச் சொன்னார்.
10
ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால் நோயாளிகளெல்லாரும் அவரைத் தொடவேண்டுமென்று அவர்மேல் வந்து விழுந்தனர்.
11
அசுத்த அவிகள் அவரைக் காணும்போது, "நீர் கடவுளின் மகன்" என்று கத்திக்கொண்டு அவர் காலில் விழுந்தன.
12
ஆனால் அவர், தம்மை வெளிப்படுத்த வேண்டாமென மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
13
மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களை அழைத்தார். அவர்கள் அவரிடம் வந்தனர்.
14
தம்மோடு இருப்பதற்கும்,
15
பேய்களை ஓட்டும் அதிகாரத்தோடு தூது அறிவிக்கத் தாம் அனுப்புவதற்குமெனப் பன்னிருவரை ஏற்படுத்தினார். இவ்வாறு பன்னிருவரை ஏற்படுத்தினார்.
16
அவர்கள் யாரெனில்: சீமோன் -- இவருக்கு இராயப்பர் என்று பெயரிட்டார். --
17
செபெதேயுவின் மகன் யாகப்பர், யாகப்பருடைய சகோதரர் அருளப்பர் - இவர்களுக்கு இடியின் மக்கள் எனப் பொருள்படும் போவனேர்கெஸ் எனப் பெயரிட்டார்.
18
பெலவேந்திரர், பிலிப்பு, பாத்தொலொமேயு, மத்தேயு, தோமையார், அல்பேயுவின் மகன் யாகப்பர், ததேயு, கனானேய சீமோன்,
19
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.
20
வீட்டிற்கு அவர் வரவே, மீண்டும் கூட்டம் கூடியது. ஆதலால் அவர்கள் சாப்பிடவும் முடியவில்லை.
21
அவருடைய உறவினர் இதைக் கேட்டு அவரைப் பிடித்துக்கொண்டுவரப் புறப்பட்டார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கிவிட்டார். என்று மக்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.
22
யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர், இவரைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறதென்றும், பேய்த்தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்றும் சொல்லி வந்தனர்.
23
ஆதலால் அவர் அவர்களை அழைத்து அவர்களுக்கு உவமையாகச் சொன்னதாவது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?
24
ஓர் அரசு தனக்கு எதிராகத் தானே பிரிந்தால் அவ்வரசு நிலைக்க முடியாது.
25
ஒரு வீடு தனக்கு எதிராகத் தானே பிரிந்தால், அவ்வீடு நிலைக்க முடியாது.
26
சாத்தான் தனக்கு எதிராகத் தானே எழுந்தால் பிரிவபுட்டு நிற்கமுடியாமல் தொலைவான்.
27
முதலில் வலியவனைக் கட்டினாலன்றி அவ்வலியவனுடைய வீட்டினுள் நுழைந்து அவனுடைய பொருள்களைக் கொள்ளையிட எவனாலும் முடியாது. கட்டின பின்புதான் அவனுடைய வீட்டைக் கொள்ளையிடுவான்.
28
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மக்களுக்கு எல்லாம் மன்னிக்கப்படும். பாவங்களும் அவர்கள் சொல்லும் தேவ தூஷணங்களும் மன்னிக்கப்படும்.
29
ஆனால், பரிசுத்த ஆவியைத் தூஷிப்பவன் எவனும் ஒருபோதும் மன்னிப்புப் பெறான், என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவான்."
30
"அசுத்த ஆவி அவரைப் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் சொல்லிவந்தால் இயேசு இவ்வாறு கூறினார்.
31
அவருடைய தாயும் சகோதரரும் வந்து வெளியே நின்றுகொண்டு, அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினர்.
32
அவரைச் சுற்றி மக்கள் கூட்டமாய் உட்கார்ந்திருந்தனர். 'இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மைத் தேடிக்கொண்டுவந்து வெளியே இருக்கின்றனர்" என்று அவரிடம் சொன்னார்கள்.
33
அதற்கு அவர், 'என் தாயும் என் சகோதரரும் யார்?" என்று கேட்டு,
34
தம்மைச் சூழ்ந்து இருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரரும்,
35
கடவுளின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயுமாவான்" என்றார்.