பின்னும் அவர் உவமைகளில் அவர்களிடம் பேசத் தொடங்கினார். "ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்து, சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஆலைக்குழி தோண்டி, கோபுரமும் கட்டி, அதைக் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டு வெளியூர் சென்றான்.
அவர்கள் அவரிடம் வந்து, "போதகரே நீர் உண்மையுள்ளவர். எவர் தயவும் உமக்கு வேண்டியதில்லை. ஏனெனில், முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும். செசாருக்கு வரி கொடுப்பது முறையா? இல்லையா? கொடுக்க வேண்டுமா? வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
"போதகரே, ஒருவனுடைய சகோதரன் இறந்து, பிள்ளையில்லாமல் மனைவியை விட்டுச் சென்றால், அவனுடைய சகோதரன் அவளை மணந்து தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று மோயீசன் எழுதிவைத்துள்ளார்.
இறந்தோர் உயிர்த்தெழுவது குறித்து மோயீசன் ஆகமத்தில் முட்செடியைப் பற்றிய பகுதியில், 'நாம் ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கடவுள் அவருக்குக் கூறியதை நீங்கள் படித்ததில்லையா?
அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்ட மறைநூல் அறிஞருள் ஒருவன் முன்வந்து, அவர் நன்றாக விடையளித்ததைக் கண்டு, "எல்லாவற்றிலும் முதல் கட்டளை எது?" என்று அவரைக் கேட்டான்.
ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக' என்பது முதல் கட்டளை.
அவருக்கு முழு உள்ளத்தோடும் முழு அறிவோடும் மழு ஆன்மாவோடும் முழு வலிமையோடும் அன்பு செய்வதும், தன்மீது அன்புகாட்டுவது போல் அயலான்மீது அன்புகாட்டுவதும், தகனப்பலிகள், மற்றப் பலிகள் எல்லாவற்றையும்விட மேலானது" என்றான்.
'ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணை யாக்கும்வரை, நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே பரிசுத்த ஆவியின் ஏவுதலால் கூறியிருக்கிறார்.
மீளவும் அவர் போதிக்கையில், "மறைநூல் அறிஞர் மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாடவும், பொது இடங்களில் வணக்கம் பெறவும் விரும்புகிறார்கள்.
இயேசு சீடர்களைத் தம்மிடம் அழைத்து, "காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஏனேனில், மற்ற எல்லாரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்" என்றார்.