"உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழைந்தவுடன் இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
' என்ன செய்கிறீர்கள்?' என்று யாராவது உங்களைக் கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை. உடனே திருப்பி இங்கே அனுப்பிவிடுவார்' என்றும் கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார்.
இலைகள் நிறைந்த ஓர் அத்திமரத்தைத் தொலைவிலே கண்டு, அதில் ஏதாவது அகப்படுமாவென்று பார்க்கப்போனார். அதன் அருகே வந்தபோது இலைகள் தவிர வேறொன்றும் காணவில்லை. ஏனெனில், அது அத்திப்பழக் காலமன்று.
அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலுக்குள் சென்று அங்கே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் துரத்தத் தொடங்கி, நாணயம் மாற்றுபவர்களின் பலகைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துவிட்டார்.
இதைக் கேட்டுத் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவரை எப்படித் தொலைக்கலாம் என்று வழித்தேடினார்கள். ஏனெனில், மக்கள்கூட்டம் அனைத்தும் அவருடைய போதனையைப்பற்றி மலைத்துப்போனதால் அவர்கள் அவருக்கு அஞ்சியிருந்தார்கள்.
உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இம்மலையைப் பார்த்து, 'நீ பெயர்ந்து கடலில் விழு' என்று சொல்லி, தான் சொல்லியதெல்லாம் நிறைவேறும் என்று தன்னுளத்தில் தயங்காது விசுவசிப்பவன் எவனோ, அவனுக்கு அது கைகூடும்.
மீண்டும் அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலின் முற்றத்தில் உலாவிக்கொண்டிருக்கும்பொழுது, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் மூப்பரும் அவரிடம் வந்து,
இல்லை, 'மனிதரிடமிருந்து வந்தது' என்று சொல்லலாமா?" -- பொதுமக்களுக்கு அஞ்சினார்கள். ஏனெனில், எல்லாரும் அருளப்பரை உண்மையான இறைவாக்கினர் என்று கருதிவந்தனர்.
எனவே, அவர்கள் இயேசுவுக்கு மறுமொழியாக, "எங்களுக்குத் தெரியாது" என்றார்கள். அதற்கு இயேசு, "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.