Indian Language Bible Word Collections
Mark 1:39
Mark Chapters
Mark 1 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Mark Chapters
Mark 1 Verses
1
கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
2
இதோ, என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவர் உம் வழியைச் சீர்ப்படுத்துவார்.
3
'ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்' எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது" என்று இசையாஸ் இறைவாக்கினர் எழுதியபடி,
4
ஸ்நாபக அருளப்பர் பாலைவனத்தில் தோன்றி, பாவமன்னிப்படைய மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அறிவித்துக் கொண்டிருந்தார்.
5
யூதேயா, நாடு முழுவதும், யெருசலேம் நகரின் அனைவரும் அவரிடம் போய்த் தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்று வந்தனர்.
6
அருளப்பர் ஒட்டக மயிராடையும், இடையில் வார்க்கச்சையும் அணிந்திருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
7
அவர் அறிவித்ததாவது: "என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வரகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்.
8
நான் உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பார்."
9
அந்நாட்களில் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசேரத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்.
10
உடனே அவர் ஆற்றிலிருந்து கரையேறுகையில், வானம் பிளவுபடுவதையும், ஆவியானவர் புறாவைப் போலத் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார்.
11
அப்பொழுது, "நீரே என் அன்பார்ந்த மகன்; உம்மிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று வானிலிருந்து ஒரு குரலொலி கேட்டது.
12
உடனே ஆவியானவர் அவரைப் பாலைவனத்திற்குப் போகச்செய்தார்.
13
பாலைவனத்தில் அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டு நாற்பது நாள் இருந்தார். அங்குக் காட்டு விலங்குகளோடு இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.
14
அருளப்பர் சிறைப்பட்டபின் இயேசு கலிலேயாவிற்கு வந்து, கடவுள் அருளிய நற்செய்தியை அறிவிக்கலானார்.
15
"காலம் நிறைவேறிற்று; கடவுளரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள்" என்றார்.
16
அவர் கலிலேயாக் கடலோரமாய்ப் போகையில் சீமோனும், இவருடைய சகோதரர் பெலவேந்திரரும் கடலில் வலை வீசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
17
ஏனெனில், அவர்கள் மீன்பிடிப்போர் இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள். நீங்கள் மனிதரைப் பிடிப்பவராய் இருக்கச் செய்வேன்" என்றார்.
18
உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.
19
அங்கிருந்து சற்று அப்பால் சென்று செபெதேயுவின் மகன் யாகப்பரும், இவருடைய சகோதரர் அருளப்பரும் படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கக் கண்டார்.
20
கண்டதும் அவர்களை அழைத்தார். அவர்கள் தம் தந்தை செபெதேயுவைக் கூலியாட்களுடன் படகில் விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.
21
அவர்கள் கப்பர் நகூம் ஊருக்கு வந்தார்கள். ஓய்வுநாளில் அவர் செபக்கூடத்திற்குச் சென்று போதிக்கலானார்.
22
அவருடைய போதனையைக் கேட்டு மக்கள் மலைத்துப்போயினர். ஏனெனில், அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரமுள்ளவராகப் போதித்து வந்தார்.
23
அச்செபக்கூடத்தில் அசுத்த ஆவியேறிய ஒருவன் இருந்தான்.
24
அவன் "நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? எங்களைத் தொலைக்க வந்தீரோ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர்" என்று கத்தினான்.
25
இயேசுவோ, "பேசாதே, இவனை விட்டுப் போ" என்று அதட்டினார்.
26
அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, பெருங்கூச்சலிட்டு அகன்றது.
27
மக்கள் அனைவரும் எவ்வளவு திகிலுற்றனர் என்றால், "இது என்ன, அதிகாரம் கொண்ட புதிய போதனை! அசுத்த ஆவிகளுக்கும் இவர் கட்டளையிடுகிறார், அவை கீழ்ப்படிகின்றனவே! " என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.
28
உடனே அவரைப்பற்றிய பேச்சு கலிலேயா நாடெங்கும் பரவிற்று.
29
பின்னர், அவர்கள் செபக்கூடத்தை விட்டு சீமோன், பெலவேந்திரர் இவர்களுடைய வீட்டுக்கு வந்தார்கள். யாகப்பரும் அருளப்பரும் அவர்களோடு சென்றனர்.
30
சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தாள். உடனே அவளைப்பற்றி அவரிடம் சொன்னார்கள்.
31
அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவளை எழுப்பினார். காய்ச்சல் அவளை விட்டுவிட்டது. அவள் அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.
32
பொழுது போய் இரவானது, நோயாளிகள், பேய்பிடித்தவர்கள் எல்லாரையும் அவரிடம் கொண்டுவந்தனர்.
33
ஊர் முழுவதும் வாயிலருகே ஒன்றாகத் திரண்டிருந்தது. பல்வேறு நோய்களால் வருந்திய பலரைக் குணப்படுத்தினார்.
34
பல பேய்களையும் ஓட்டினார். பேய்களை அவர் சே விடவில்லை. ஏனெனில், அவை அவரை அறிந்திருந்தன.
35
அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். அங்கே செபம் செய்துகொண்டிருந்தார்.
36
சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிப்போயினர்.
37
அவரைக்கண்டு, "எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றனர்.
38
அதற்கு அவர், "அடுத்த ஊர்களுக்குப் போவோம். அங்கும் நான் தூது அறிவிக்க வேண்டும். இதற்காகவே வந்திருக்கிறேன்" என்றார்.
39
அவ்வாறே கலிலேயா எங்கும் அவர்களுடைய செபக்கூடங்களில் தூது அறிவித்தும், பேய்களை ஓட்டியும் வந்தார்.
40
தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து முழந்தாளிட்டு, "நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்.
41
இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி, அவனைத் தொட்டு, "விரும்புகிறேன், குணமாகு" என்றார்.
42
உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.
43
அவனை நோக்கி, "பார், யாருக்கும் ஒன்றும் சொல்லாதே. போய் உன்னைக் குருவிடம் காட்டி, நீ குணமானதற்காக, மோயீசன் கட்டளையிட்டதைக் காணிக்கையாகச் செலுத்து.
44
அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்று கண்டிப்பாய்ச் சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.
45
அவனோ சென்று நடந்ததைச் சொல்லி எங்கும் விளம்பரப்படுத்தினான். அதனால் அவர் எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ப் போக முடியாமல் வெளியே தனிமையான இடங்களில் இருந்தார். எனினும் மக்கள் எங்குமிருந்து அவரிடம் வந்தனர்.