Indian Language Bible Word Collections
Luke 22:70
Luke Chapters
Luke 22 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Luke Chapters
Luke 22 Verses
1
பாஸ்கா எனப்படும் புளியாத அப்பத் திருவிழா அடுத்திருந்தது.
2
தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எப்படித் தொலைக்கலாமென்று வழிதேடிக்கொண்டிருந்தனர். ஆனால், பொதுமக்களுக்கு அஞ்சினர்.
3
பன்னிருவருள் ஒருவனான இஸ்காரியோத்து எனப்படும் யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
4
தலைமக்குருக்களிடமும் காவல்தலைவர்களிடமும் சென்று, தான் இயேசுவை அவர்களுக்கு எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்பதைப்பற்றிக் கலந்துபேசினான்.
5
அவர்கள் மகிழ்ச்சியுற்று, அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள்.
6
அவனும் ஒப்புக்கொண்டு கூட்டம் இல்லாதபோது அவரைக் காட்டிக்கொடுக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
7
அப்போது பாஸ்காச் செம்மறியைப் பலியிட வேண்டிய புளியாத அப்பத் திருவிழா வந்தது.
8
"நாம் பாஸ்காப் பலியுணவை உண்பதற்கு நீங்கள் போய் ஏற்பாடுசெய்யுங்கள்" என்று இயேசு இராய்பபரையும் அருளப் பரையும் அனுப்பினார்.
9
எங்கே ஏற்பாடுசெய்ய வேண்டும் என்கிறீர்?" என்று அவர்கள் அவரிடம் கேட்டனர்.
10
"நீங்கள் நகருக்குள் போகும்போது, ஒருவன் தண்ணீர்க்குடம் சுமந்துகொண்டு உங்களுக்கு எதிரே வருவான். அவன் நுழையும் வீட்டிற்கு அவன்பின்னே சென்று,
11
அந்த வீட்டுத் தலைவனிடம், ' நான் என் சீடருடன் பாஸ்கா உணவை உண்பதற்கான அறை எங்கே என்று போதகர் உம்மைக் கேட்கிறார் ' எனச் சொல்லுங்கள்.
12
இருக்கை முதலியன அமைந்துள்ள ஒரு பெரிய மாடி அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான். அங்கே ஏற்பாடுசெய்யுங்கள் " என்றார்.
13
அவர்கள் போய், தங்களிடம் அவர் சொல்லியவாறே நிகழ்ந்ததைக் கண்டு, பாஸ்கா உணவுக்கு ஏற்பாடுசெய்தார்கள்.
14
நேரம் வந்ததும், அவர் பந்தியமர்ந்தார்; அப்போஸ்தலரும் அவருடன் அமர்ந்தனர்.
15
"நான் பாடுபடுவதற்கு முன் உங்களோடு இந்தப் பாஸ்கா உணவை உண்ண ஆசைமேல் ஆசையாய் இருந்தேன்.
16
ஏனெனில், கடவுளுடைய அரசில் இது நிறைவேறுமளவும், இதை இனி உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
17
பின்பு கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி, " இதை வாங்கி உங்களுக்குள் பகிர்ந்துகொள்ளுங்கள்.
18
ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு வரும்வரை திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன் " என்றார்.
19
மேலும் அப்பத்தை எடுத்து, நன்றிகூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்து, " இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்றார்.
20
அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை.
21
"என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ! என்னோடு பந்தியில் அமர்ந்து உண்ணுகிறான்.
22
மனுமகன் தேவ ஏற்பாட்டின்படி போகத்தான் போகிறார். ஆனால் அவரைக் காட்டிக்கொடுப்பவனுக்கு ஜயோ கேடு! " என்றார்.
23
"அப்படியானால் நம்முள் யார் இதைச் செய்யப்போகிறவன்?" என்று அவர்கள் தஙகளுக்குள்ளே வினவத்தொடங்கினர்.
24
மேலும் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே உண்டாயிற்று.
25
அதற்கு அவர், "புறவினத்தாரின் அரசர்கள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றார்கள். அப்படி அதிகாரம் செலுத்துவோர் 'நன்மை புரிவோர்' எனப்படுகின்றனர்.
26
நீங்களோ அப்படி இருத்தல் ஆகாது. ஆனால், உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும்.
27
யார் பெரியவன்? பந்தியில் அமர்பவனா, பணிவிடை செய்பவனா? பந்தியில் அமர்பவன் அன்றோ? நானோ உங்கள் நடுவே பணிவிடை புரிபவனைப் போல் இருக்கிறேன்.
28
"என் துன்ப சோதனைகளில் என்னுடன் நிலைத்துநின்றவர்கள் நீங்களே.
29
என் தந்தை எனக்கு அரசுரிமை வழங்கியதுபோல நானும் உங்களுக்கு அதை வழங்கப்போகிறேன்.
30
எனவே, என் அரசில் என்னுடன் பந்தியில் உண்பீர்கள், குடிப்பீர்கள். இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களுக்கும் நடுவராக அரியணையில் வீற்றிருப்பீர்கள்.
31
"சீமோனே, சீமோனே, இதோ! சாத்தான் உங்களைக் கோதுமைப்போலப் புடைக்க உத்தரவு பெற்றுகொண்டான்.
32
ஆனால் உன் விசுவாசம் தவறாதபடி உனக்காக மன்றாடினேன். நீ திருந்தியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" என்றார்.
33
அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, உம்மோடு சிறைக்கும் சாவுக்கும் உள்ளாக ஆயத்தமாய் இருக்கிறேன்" என்றார்.
34
இயேசுவோ, "இராயப்பா, 'நான் அவரை அறியேன்' என்று நீ மும்முறை மறுதலிக்குமுன், இன்று கோழி கூவாது என் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
35
பின்பு அவர்களை நோக்கி, "பணப்பை, கைப்பை, மிதியடி எதுவுமில்லாமல் உங்களை நான் அனுப்பியபோது உங்களுக்கு ஏதாவது குறைவாய் இருந்ததா?" என்று வினவினார்.
36
இல்லை" என்றனர்.'"இப்பொழுதோ பணப்பை உள்ளவன் அதை எடுத்துக்கொள்ளட்டும். கைப்பை உள்ளவனும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவன், தன் மேலாடையை விற்றுவிட்டு வாள் ஒன்று வாங்கிக் கொள்ளட்டும்.
37
ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: 'நெறிகெட்டவர்களோடு ஒன்றாக எண்ணப்பட்டார்' என்று எழுதியுள்ளது என்மட்டில் நிறைவேறவேண்டும். என்னைப் பற்றியதெல்லாம் நிறைவுபெறுகின்றது" என்றார்.
38
அவர்கள், "ஆண்டவரே, இதோ! இரண்டு வாள் இங்கு உள்ளன என்றனர். அவரோ, "போதும்" என்றார்.
39
அங்கிருந்து வெளியே புறப்பட்டுச் சென்று வழக்கப்படி ஒலிவமலைக்கு வந்தார். அவருடைய சீடர் அவரைப் பின்தொடர்ந்தனர்.
40
அவ்விடத்தை அடைந்ததும் அவர்களை நோக்கி, "சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்" என்றார்.
41
பின்னர், அவர்களை விட்டுக் கல்லெறி தொலைவு சென்று முழங்காலிலிருந்து,
42
"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்; எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.
43
அப்போது வானதூதர் ஒருவர் அவருக்குத் தோன்றி, அவரைத் திடப்படுத்தினார்.
44
கொடிய வேதனைக்குள்ளாகவே, மேலும் உருக்கமாய்ச் செபித்தார். அவருடைய வியர்வை பெரும் இரத்தத் துளிகளாக நிலத்தில் விழுந்தது.
45
செபத்தை விட்டெழுந்து, தம் சீடரிடம் வந்தார். அவர்கள் துயரத்தால் உறங்குவதைக் கண்டு,
46
அவர்களை நேக்கி, "ஏன் உறங்குகிறீர்கள்? எழுந்திருங்கள், சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்" என்றார்.
47
அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, இதோ! ஒரு கூட்டம் வந்தது. பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் என்பவன் அவர்களுக்கு முன்சென்று இயேசுவை முத்தமிட அணுகினான்.
48
இயேசு அவனை நோக்கி, "யூதாசே, முத்தமிட்டோ மனுமகளைக் காட்டிக்கொடுக்கிறாய்?" என்றார்.
49
சூழநின்றவர்கள் நடக்கப்போவதை உணர்ந்து, அவரிடம், "ஆண்டவரே, வாளால் வெட்டுவோமா?" என்று கேட்டனர்.
50
அவர்களுள் ஒருவன் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி அவனுடைய வலக்காதைத் துண்டித்தான்.
51
போதும், விடுங்கள்" என்று இயேசு சொல்லி, அவன் காதைத் தொட்டுக் குணப்படுத்தினார்.
52
இயேசு தம்மைப் பிடிக்க வந்திருந்த தலைமைக்குருக்களையும், கோயிலின் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி, "நீங்கள் கள்வனிடம் வருவதுபோல வாளோடும் தடியோடும் வந்தீர்களோ?
53
நாள்தோறும் கோயிலில் நான் உங்களோடு இருந்தும் நீங்கள் என்மேல் கைவைக்கவில்லை. ஆனால் இது உங்கள் நேரம்; இருள் ஆட்சிபுரியும் நேரம்" என்றார்.
54
பின்னர், அவர்கள் அவரைப் பிடித்து, தலைமைக்குருவின் இல்லத்திற்குக் கூட்டிச்சென்றனர். இராயப்பரோ தொலைவிலே பின்தொடர்ந்தார்.
55
முற்றத்தின் நடுவில் அவர்கள் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்தனர். இராயப்பரும் அவர்களோடு போய் உட்கார்ந்துகொண்டார்.
56
ஊழியக்காரி ஒருத்தி, அவர் அனல் அருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, "இவனும் அவனுடன் இருந்தான்" என்றாள்.
57
அவரோ, "எனக்கு அவரைத் தெரியாதம்மா" என்று மறுத்தார்.
58
சற்று நேரத்திற்குப்பின் மற்றொருவன் அவரைக் கண்டு, "நீயும் அவர்களுள் ஒருவன்தான்" என, இராயப்பரோ, 'இல்லையப்பா" என்றார்.
59
ஏறக்குறைய ஒருமணிநேரம் கழித்து இன்னொருவன், "உண்மையாகவே, இவனும் அவனோடு இருந்தான்; ஏனெனில் இவன் கலிலேயன்தான்" என்று அழுத்தமாய்க் கூறினான்.
60
இராயப்பரோ, "நீ சொல்வது எனக்குத் தெரியதப்பா" என்றார். உடனே, அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே கோழி கூவிற்று.
61
ஆண்டவர் திரும்பி இராயப்பரை உற்றுநோக்கவே, "இன்று கோழி கூவுமுன்னர் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று ஆண்டவர் கூறிய வார்த்தையை அவர் நினைவுகூர்ந்து,
62
வெளியே போய் மனம் வெதும்பி அழுதார்.
63
இயேசுவைக் காவல் செய்துகொண்டிருந்தவர்கள் அவரை அடித்து ஏளனம் செய்தனர்.
64
அவருடைய முகத்தை மூடி, "உன்னை அடித்தவன் யாரென்று தீர்க்கதரிசனமாகச் சொல்" என்றனர்.
65
இன்னும் அவரைப் பலவாறு பழித்துப்பேசலாயினர்.
66
பொழுது விடிந்ததும் மூப்பர் சபையினரும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் ஒன்றுகூடித் தங்கள் நீதிமன்றத்திற்கு அவரைக் கூட்டிப்போய், "நீ மெசியாவானால், எங்களுக்குச் சொல்" என்றனர்.
67
அவர் அவர்களை நோக்கி, "நான் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள்.
68
நான் உங்களை வினவினாலோ, நீங்கள் விடையளிக்கவும் மாட்டீர்கள்.
69
இனிமேல் மனுமகன் வல்லமையுள்ள கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருப்பார்" என்றார்.
70
அதற்கு அனைவரும், "அப்படியானால் நீ கடவுளின் மகனா?" என, அதற்கு அவர், "நான் கடவுளின் மகன் என்று நீங்களே சொல்லுகிறீர்கள்" என்றார்.
71
அவர்களோ, " நமக்கு இன்னும் சாட்சியம் எதற்கு? இவன் வாயிலிருந்தே இதைக் கேட்டோமே" என்றனர்.