மேலும் அவர் இந்த உவமையைக் கூறினார்; "ஒருவன் தன் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டுவைத்திருந்தான். அவன் வந்து அதிலே பழம் தேடியபொழுது ஒன்றுங்காணவில்லை.
ஆகவே, தோட்டக்காரனிடம், 'மூன்று ஆண்டுகளாக வந்து, இந்த அத்திமரத்திலே பழம் தேடுகிறேன். ஒன்றும் காணவில்லை. இதை வெட்டிவிடு. ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது?' என்றான்.
இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி, "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.
ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?
அது கடுகுமணிக்கு ஒப்பாகும். ஒருவன் அதை எடுத்துத் தன் தோட்டத்திலே விதைக்கிறான். அது வளர்ந்து பெரிய மரமாயிற்று. வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குகின்றன" என்றார்.
வீட்டுத் தலைவர் எழுந்து கதவைத் தாளிட, நீங்கள் வெளியே நின்று கதவைத் தட்டிக்கொண்டே, 'ஆண்டவரே, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்பீர்கள். அதற்கு அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ, யானறியேன்' என்று கூறுவார்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபும், இன்னும் எல்லா இறைவாக்கினர்களும் கடவுளின் அரசில் இருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்படுவதையும் காணும்போது, புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்.
அதற்கு அவர், "நீங்கள் போய் அந்தக் குள்ளநரியிடம் இதை அறிவியுங்கள்: 'இன்றும் நாளையும் போய் ஓட்டுகிறேன். நோய்களையும் குணமாக்குகிறேன். மூன்றாம் நாள் முடிவடைவேன்.
இதோ! உங்கள் வீடு குடியற்றுப்போகும். 'ஆண்டவருடைய பெயரால் வருகிறவர் வாழி' என்று நீங்கள் கூறும் நாள்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.