அல்லது அபிசேகம் செய்யப் பெற்ற ஒரு குரு பாவம் செய்து அதனால் மக்களையும் பாவத்திற்கு உட்படுத்தும் போது, அவன் தன் பாவத்திற்கு பரிகாரமாக மறுவற்ற ஒரு இளங்காளையை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பானாக.
மேலும், அவன் அதில் கொஞ்சம் எடுத்துச் சாட்சியக் கூடாரத்தின் உள்ளேயிருக்கும் ஆண்டவருக்கு மிக விருப்பமானதாகவும் நறுமணமுள்ளதாகவும் இருக்கும்படி பீடக் கொம்புகளின் மேல் பூசுவான். மீதியை எல்லாம் கூடார வாயிலிலுள்ள தகனப்பலி பீடத்தின் அடியில் ஊற்றிவிடக்கடவான்.
பிறகு அவன் பாவத்திற்குப் பரிகாரமாகச் செலுத்தப்படும் பலிப் பொருளின் கொழுப்பு முழுவதையும், குடல்களை மூடியிருக்கும் கொழுப்பையும், உள்ளே இருக்கிற எல்லாவற்றையும் எடுத்து,
தலை, கால், குடல், சாணம், முதலிய மற்ற உடலுறுப்புக்களையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுவதற்குக் குறிக்கப்பட்ட சுத்தமான இடத்திற்குக் கொண்டு போய், அவ்விடத்திலே விறகுக் கட்டைகளின் மேல் இட்டுச் சுட்டெரிக்கக் கடவான்.
பிறகு, தாங்கள் செய்தது பாவமென்று கண்டுபிடித்தால், அவர்கள் தங்கள் பாவப் பரிகாரமாக ஒரு இளங்காளையை ஒப்புக் கொடுக்க வேண்டும். அதற்காகக் கூடார வாயிலுக்கு அதைக் கொண்டு வரவேண்டும்.
பிறகு சாட்சியக் கூடாரத்திலே ஆண்டவர் திருமுன் அமைந்திருக்கும் பீடத்தின் கொம்புகளிலும் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தைச் சாட்சியக் கூடார வாயிலிலுள்ள தகனப் பீடத்தின் அடியில் ஊற்றி விடுவார்.
தனது கையை அதன் தலை மீது வைத்து அது பாவ விமோசனப் பலியாய் இருப்பதனால், ஆண்டவர் திருமுன் தகனப்பலியிடுவதற்குக் குறித்திருக்கும் இடத்திலே அதைப் பலியிடுவான்.
பின்னர் குரு பாவத்துக்கான பலிப்பொருளின் இரத்தத்திலே விரலைத் தோய்த்துத் தகனப் பலிபீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் பாதத்திலே ஊற்றி விடுவார்.
கொழுப்பையோ, சமாதானப் பலிகளில் செய்யப்படுகிற வழக்கப்படி, (பீடத்தின்மீது ) சுட்டெரித்த பிறகு, குரு அவனுக்காகவும் அவன் பாவத்துக்காகவும் மன்றாடவே அவன் மன்னிப்படைவான்.
சமாதானப் பலிகளில் செய்யப்படுவதுபோல்,( குரு ) கொழுப்பெல்லாம் எடுத்துக்கொண்டு போய்ப் பீடத்தின் மீது ஆண்டவருக்கு நறுமணமாய்ச் சுட்டெரித்து, அவனுக்காக மன்றாடுவார். அப்போது அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
பிறகு, சமாதானப் பலியாக வெட்டப்படும் செம்மறிக் கிடாயிக்குச் செய்கிற வழக்கப்படி, அதனுடைய கொழுப்பெல்லாம் எடுத்துப் பீடத்தின் மீது ஆண்டவருக்கு உரித்தான தூபவகைகளாகச் சுட்டெரித்து, அவனுக்காகவும் அவன் பாவத்துக்காகவும் மன்றாடுவாராக. அதனால் அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.