நீ ஆரோனோடும் அவன் புதல்வரோடும் பேசி, இஸ்ராயேல் மக்களால் நமக்கு நேர்ந்து விடப்பட்ட காணிக்கைகளை அவர்கள் தொடவேண்டாமென்றும், அவர்களே நமக்குச் செலுத்திவருகிற பரிசுத்த மாக்கப்பட்டவைகளின் பெயரை இழிவுபடுத்த வேண்டாமென்றும் சொல். நாம் ஆண்டவர்.
நீ அவர்களையும் அவர்களின் சந்ததியாரையும் நோக்கி: உங்கள் வம்ச சந்ததியாரில் எவனேனும் தீட்டுப்பட்டவனாயிருந்து, இஸ்ராயேல் மக்களால் ஆண்டவருக்குக் காணிக்கையாக, ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளின் அண்டையில் சென்றானாயின், அவன் ஆண்டவர் முன்னிலையில் கொலை செய்யப்படுவான்.
நாம் ஆண்டவர். ஆரோனின் சந்ததியாரில் தொழுநோய் அல்லது மேகவெட்டை உள்ளவன் தான் குணமடையும் வரை நமக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட காணிக்கைகளில் ஒன்றையும் உண்ணலாகாது. பிணத்தைத் தொட்டதினால் தீட்டுள்ளவனையும், இந்திரியக் கழிவு உள்ளவனையும்,
அவர்கள் பாவத்துக்கு உட்படாதபடிக்கும், பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தின பின் அவர்கள் அதிலே சாகாதபடிக்கும் நம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளக் கடவார்கள். நாம் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர்.
ஆனால், அவள் விதவையாகி அல்லது பிள்ளையில்லாது, தள்ளுபடி யானவளாகித் தந்தை வீட்டிற்குத் திரும்பி வந்தவளானால், அவள் சிறு பெண்ணாயிருந்த நாளிலே உண்டு வந்ததுபோல் இப்பொழுதும் தந்தையின் உணவை உண்ணலாம். அந்நியரில் ஒருவனும் அதை உண்ணலாகாது.
அவர்கள் பரிசுத்தமானவற்றை உண்டால் தங்கள் குற்றத்திற்காகப் பெறவிருக்கும் தண்டனைக்கு அஞ்சக்கடவார்கள். அவர்களைப் பரிசுத்தமாக்குகின்ற ஆண்டவர் நாமே, என்று திருவுளம் பற்றினார்.
நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் நோக்கி: அவர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேலரிலும் உங்களிடையே தங்குகிற அந்நியரிலும் யாரேனும் தன் நேர்ச்சியின்படியோ தன் உற்சாகத்தின்படியோ தன் காணிக்கையை ஒப்புக்கொடுக்க வரும்போது, ஆண்டவருக்குத் தகனப்பலிக்கென்று அவன் கொண்டு வரும் காணிக்கை எவ்வகையானதாயிருந்த போதிலும்,
அதை ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதன்று. ஒருவன் நேர்ச்சியாகவோ, உற்சாகமாகவோ மாடுகளிலும் சரி ஆடுகளிலும் சரி, ஆண்டவருக்குச் சமாதானப் பலியைச் செலுத்துவதாயின், அது ஏற்றுக் கொள்ளப்படும்படி ஒரு மறுவுமின்றி உத்தமமாய் இருக்கவேண்டும்.
அது குருடு, நெரிசல், தழும்பு, கொப்புளம், சொறி, சிரங்கு முதலிய பழுது உள்ளதாயின், அதை ஆண்டவருச் செலுத்தவும் கூடாது; ஆண்டவருடைய பலிபீடத்தில் தகனப் பலியிடவும் கூடாது.
நீ உற்சாகத்தை முன்னிட்டு ஆட்டையோ, மாட்டையோ படைக்க மனமுள்ளவனாய் இருந்தால், அறுத்த காதும் முறித்த வாலுமுள்ள விலங்கைப் பலியிட்டாலும் இடலாம். ஆனால், நேர்ச்சைக்காக அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் கத்தியால் அறுத்து விதை எடுக்கப்பட்டதையும் ஆண்டவருக்குப் படைத்தலாகாது. உங்கள் நாட்டில் அதைக் கண்டிப்பாய்ச் செய்யலாகாது.
நீங்கள் அந்நியன் கையிலே அப்பங்களையோ, வேறு யாதொன்றையோ வாங்கி, அவன் பெயரால் ஆண்டவருக்குச் செலுத்தாதீர்கள். உண்மையில் அவையெல்லாம் தீட்டும் பழுதும் உள்ளவை. அவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றருளினார்.
கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டுக்குட்டியோ, வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்தால். அது ஏழு நாள் தன் தாயின் முலைப்பாலைக் குடிக்கும். ஆனால், எட்டாம் நாளில் அல்லது அதற்குப் பின் வரும் நாளில் அது ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்படலாம்.