இஸ்ராயேல் மக்கள் எல்லாச் சபையாருக்கும் நீ சொல்ல வேண்டியதாவது: நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்; நாம் பரிசுத்தராய் இருப்பதால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.
அவ்வண்ணமே உன் திராட்சைத் தோட்டத்தில் விழுந்து கிடக்கிற பழக்குலைகளையோ பழங்களையோ பொறுக்கவேண்டாம். அவற்றை எளியவர்களுக்கும் அந்நியருக்கும் விட்டுவிடு. நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
உன் பிறன் மீது அபாண்டம் சொல்லாமலும், அவனை வலுவந்தத்தால் வருத்தாமலும் இருப்பாயாக. உன் கூலியாளின் வேலைக்குக் கொடுக்க வேண்டிய கூலியை வியற்காலைவரை உன்னிடம் வைத்திராதே.
அநீதி செய்யாதே. வழக்கிலே நீதிக்கு மாறாய்த் தீர்ப்பிடாதே. ஒருவன் ஏழையென்று கண்டு, அவனை அற்பமாய் எண்ணாதே. ஒருவன் பணக்காரனென்று பார்த்து முகத்தாட்சனியம் காட்டாதே. முறையோடு உன் பிறனுக்கு நீதி வழங்கு.
பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் மக்கள் உனக்கு அநீதி செய்தாலும், மனத்தில் பொறாமை கொள்ளாதே. உனக்கு அன்பு செய்வது போல் உன் அயலானுக்கும் அன்பு செய். நாம் ஆண்டவர்.
நமது சட்டங்களைக் கைக்கொள். உன் மிருகங்களை வேற்றின மிருகத்தோடு பொலிய விடாதே. உன் வயலில் வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே. இரு விதமான நூல்களால் நெய்யப்பட்ட ஆடையை அணியாதே.
அடிமைப பெண் ஒருத்தி, ஒருவனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து மீட்கப்படாமலும், விடுதலை அடையாமலும் இருக்கையிலே, அவளோடு ஒருவன் படுத்தானென்றால் அவர்கள் இருவரும் கொலை செய்யப்படாமல் அடிக்கப்படவேண்டும். ஏனென்றால், அந்தப் பெண் விடுதலை பெற்றவள் அல்ல.
அவன் பாவமும் மன்னிக்கப்படும். நீங்கள் உங்கள் நாட்டில் புகுந்து, கனி தரும் மரங்களை நட்ட பின், அவைகளின் மிஞ்சின கிளைகளைக் கழிக்க வேண்டியதிருக்கும். அம் மரங்களின் கனிகள் உங்களுக்குத் தீட்டுள்ளவைகளாதலால், அவற்றை உண்ண வேண்டாம்.
அப்படிப்பட்டவனைக் குடிமகன்போல் எண்ணி, நீங்கள் உங்களுக்கு அன்பு செய்வது போல் அவனுக்கும் அன்பு செய்ய வேண்டும். நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியராய் இருந்தீர்களன்றோ ? நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
முத்திரைத் துலாக்கோலும், முத்திரை எடைக்கல்லும், முத்திரை மரக்காலும், முத்திரைப் படியும் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்ட உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே.