சுத்திகரிக்கப் படவேண்டியவனுக்காக இரண்டு அடைக்கலான் குருவிகளையும், கேதுருக் கட்டையையும், இரத்தநிறநூலையும், ஈசோப்பையும் கொண்டு வந்து ஒப்புக்கொடுக்கக் குரு கட்டைளையிடுவார்.
சுத்திகரிக்கப்பட வேண்டியவன் மேலே ஏழு தடவை தெளிப்பார். அதனால் அவன் சட்டப்படி சுத்தமுள்ளவனாவானேயன்றி வேறல்ல. பின் குரு உயிரோடிருக்கும் குருவியை வெளியிலே பறந்தோட விட்டு விடுவார்.
பிறகு அம்மனிதன் தன் ஆடைகளைத் தோய்த்துக் கழுவி, உடம்பிலுள்ள மயிரெல்லாம் சிரைத்த பின் தண்ணீரில் குளிப்பான். இவ்வாறு அவன் சுத்திகரம் அடைந்து பாளையத்தில் புகுவான். ஆயினும், ஏழுநாள்வரை தனது கூடாரத்துக்கு வெளியே தங்கக்கடவான்.
எட்டாம் நாளிலே மறுவற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், ஒருவயதுள்ள மறுவற்ற ஒரு பெண்ணாட்டையும் போசனப்பலிக்காக ஒரு மரக்காலின் பத்தில் மூன்று பங்கு மிருதுவான எண்ணெயில் பிசைந்த மாவையும், இவற்றுடன் ஆழாக்கு எண்ணெயையும் கொண்டு வருவான்.
அது மிகவும் பரிசுத்தமே. பின் குரு குற்றப் பரிகாரமாய்ப் பலியிடப்பட்ட மிருகத்தின் குருதியில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப் படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும், வலக் கைகால்களின் பெரு விரலிலும் தடவுவார்.
ஆனால், அவன் ஏழையாய் இருந்து (மேற்) சொன்னவற்றைச் சேகரிக்கச் சக்தியற்றவனானால், குரு அவனுக்காக மன்றாடும் பொருட்டுக் குற்றப் பரிகாரத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய ஓர் ஆட்டுக்குட்டியையும், போசனப் பலிக்காக எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மிருதுவான மாவிலே பத்திலொரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்
ஆட்டுக்குட்டியைக் கொன்று, அதன் குருதியில் சிறிது எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும் வலக்கை கால்களின் பெருவிரலிலும், தடவிய பின்னர்,
நாம் உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்க விருக்கிற நாட்டிலே நீங்கள் போய்ச் சேர்ந்த பின் யாதொரு வீட்டில் தொழுநோய் காணப்பட்டால் அவ்வீட்டுத்தலைவன் குருவிடம் போய்:
அப்பொழுது குரு அந்த வீடு தொழுநோயுள்ளதோ என்று போய்ப் பரிசோதிக்கு முன்பே, வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாத படிக்கு அவற்றை வீட்டினின்று வெளியேற்றும்படி கட்டளையிட்டு, அதன் பிறகே அவ்வீட்டிலுள்ள நோயைப் பார்க்கப் போவார்.
அப்போது அவன் வீட்டுச் சுவர்களிலே பார்க்க அலங்கோலமான வெள்ளை அல்லது சிவப்புக் கறைகள் உண்டென்றும், அவைகள் மற்றச் சுவரை விடப் பள்ளமாய்க் குழிந்திருக்கின்றனவென்றும் கண்டால்,
வேறு பூச்சும் செய்த பின், குரு உள்ளே போய், தொழுநோய் திரும்பவும் வீட்டில் வந்துள்ளதென்றும், சுவர்கள் கறைகறையாய் இருக்கின்றனவென்றும் கண்டால் அது தீராத் தொழுநோயாதலால் வீடு தீட்டாய் இருக்கும்.
அந்த வீடு முழுவதையும் இடித்து, அதன் கற்களையும், மரங்களையும், சாந்து, மண் முதலிய இடிசல்களையும் ( கொண்டுபோய் ) நகருக்கு வெளியே அசுத்தமான ஓர் இடத்தில் போடவேண்டும்.