ஒரு மனிதனுடைய தோலிலோ சதையிலோ வித்தியாசமான நிறமாவது கொப்புளமாவது ஒருவிதத் துலக்கமான வெண்படலமாவது உண்டானால், அது தொழுநோயென்று அறிந்து, அவனைக் குருவான ஆரோனிடமோ, அவர் புதல்வருள் எவனிடமோ கொண்டுவர வேண்டும்.
குரு அவனுடைய தோலிலே தொழுநோய் இருப்பதையும் மயிர்கள் வெண்ணிறமாய் மாறியிருப்பதையும் அந்தத் தொழுநோயின் தோற்றம் மற்றத்தோலையும் சதையையும் விடச் சற்றுப் பள்ளமாய் இருப்பதையும் கண்டால், அது தொழுநோய் என்று கூறுவார். அப்பொழுது அவருடைய தீர்ப்புக்கேற்றபடி அந்த நோயாளி தனியாய் வைக்கப்படுவான்.
அந்தத் துலக்கமான வெண்படலம் தோலில் இருந்தும், அவ்விடம் அவனுடைய தோலையும் சதையையும் விடப்பள்ளமாய் இராமலும் அதன் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், குரு அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவார். அப்பொழுது நோய் அதிகப்படாமலும், முன்னைவிட அதிகமாய்த் தோலில் படராமலும் இருக்கக்கண்டால், குரு மீண்டும் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
ஏழாம் நாளில் அவனைக் கவனித்துப் பார்க்கக்கடவார். அப்போது அது சற்றுக் கருமையாகித் தோலில் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், அது சிரங்காகையால், அவனைச் சுத்தமானவன் என்று அனுப்பி விடுவார். அம்மனிதனோ தன் ஆடைகளைக் கழுவிச் சுத்தமாய் இருப்பான்.
ஆயினும், நோயாளி குருவினால் பரிசோதிக்கப்பட்டுச் சுத்தனென்று அனுப்பிவிடப்பட்ட பின், மறுபடியும் ( அவன் உடலிலே ) தொழுநோய் அதிகப்பட்டால், குருவிடம் அவன் மீண்டும் கொண்டுவரப்படுவான்.
அது வெகு நாட்பட்ட நோயென்றும், சதையினுள் பழுத்துள்ளதென்றும் தீர்மானிக்கப்படும். குரு அவனைத் ( தீட்டுள்ளவனென்று ) தீர்ப்புச் சொல்வார். இருப்பினும், அவனுடைய தீட்டு வெளிப்படையானபடியால், அவனை அடைத்து வைக்கமாட்டார்.
தொழுநோய் உள்ள அவ்விடம் மற்ற சதையை விடப் பள்ளமாய் இருக்கிறதென்றும், மயிர்கள் வெள்ளையாகிவிட்டன என்றும் ( குரு ) கண்டாராயின், அவனைத் தீட்டுள்ளவன் என்பார். ஏனென்றால் அது புண்ணில் உண்டான தொழுநோய்.
(ஒருவனுடைய) உடலின்மேல் நெருப்புப் பட்டதனாலே புண்ணுண்டாகி அது ஆறிப்போய் அவ்விடத்திலே வெள்ளை அல்லது சிவப்பான தழும்பு உண்டாயிருந்தால், அதைக் குரு கவனித்து வரக்கடவார்.
அந்தப் புண் வெள்ளையாக மாறிப் போயிற்றென்றும், மற்றத் தோலைக் காட்டிலும் அவ்விடம் பள்ளமாயிருத்கிற தென்றும் கண்டால், குரு அவனைத் தீட்டுள்ளவன் என்று முடிவு செய்வார். ஏனென்றால், அது தழும்பிலே உண்டான தொழுநோய் ஆகும்.
ஆனால், மயிர் நிறம் மாறாமலும் புண் இருக்கும் இடம் மற்றச் சதையைவிடக் குழிந்திராமலும், தழும்பு சிறிது கருமையாயுமிருக்குமாயின், குரு அவனை ஏழு நாள் அடைத்து வைத்து,
அவ்வாறின்றி, வெளுவெளுப்பான நிறம் முன் இருந்த அளவிலே நின்றதாயின், அது வேக்காடேயன்றி வேறொன்றுமில்லை. அதனால், குரு அது சூட்டினால் உண்டான தழும்பென்று, அந்த மனிதனைச் சுத்தமானவன் எனத் தீர்ப்புக் கூறுவார்.
ஏழாம் நாளிலே அவனைப் பார்க்கக்கடவார். இப்படிப் பார்த்து, வெண்படலம் (மேலும்) பரவவில்லை, மயிர் சுய நிறமுள்ளது, அவ்விடத்துத் தோலும் மற்றத் தோலும் ஒரே மட்டத்தில் இருக்கின்றன என்று குரு கண்டால்,
ஏழாம் நாளிலே அதைப் பரிசோதிக்க அப்படலம் முன்னிருந்த அளவிலேயே நின்றதென்றும், அவ்விடம் மற்றத் தோலை விடப் பள்ளமாய் இல்லையென்றும் கண்டால், குரு அவனைச் சுத்தமானவன் என்று கூறுவார். அவன் தன் ஆடைகளைத் தோய்த்த பின் சுத்தமாகவே இருப்பான்.
ஆனால், படலம் அதிகப்படவில்லை, மயிரோ கருப்பு என்று கண்டால், அந்த மனிதன் குணமடைந்துள்ளான் என்றறிந்து, குரு அவனைச் சுத்தமானவனென்று அச்சமின்றித் தீர்க்கக் கடவார்.
குரு அவர்களைப் பரிசோதித்துப் பார்க்கக்கடவார். இப்படிப் பார்க்கையில், அவர்களுடைய தோலிலே ஏதோ மங்கின வெள்ளை போல் மினுக்கும் புள்ளிகள் தேன்றினவென்று கண்டால், அது வெள்ளைத்தோலே தவிரத் தொழுநோய் அன்று என்றும், அவர்கள் சுத்தமானவர்கள் என்றும் கண்டுபிடிக்கக்கடவார்.
ஏழாம் நாள் திரும்பவும் அதைச் சோதித்துப் பார்க்கையில், கறை, மேலும் படர்ந்திருக்கக் கண்டால் அது தீராத்தொழுநோய் என்று கண்டு மேற்சொன்ன ஆடையும், முன்சொன்ன கறையுள்ள பொருளும் தீட்டுள்ளவை என்று குரு முடிவாய்ச் சொல்வார்.
அப்பொழுது அதற்கு இயற்கையான நிறம் திரும்பிவராதிருந்த போதிலும், தொழுநோய் மேலும் பரவவில்லையென்று காண்பாராயின், மேற்சொன்ன பொருள் தீட்டாயிருக்கிறதென்று தீர்மானித்து, அதை நெருப்பில் சுட்டெரித்து விடுவார். ஏனென்றால், தொழுநோய் ஆடையின் வெளிப்புறத்திலேனும், உட்புறத்திலும் வெளிப்புறத்திலுமேனும் பரவியிருக்கிறது.
ஆட்டுமயிர்களால் அல்லது மெல்லிய சணல் நூல்களால் நெய்யப்பட்ட அவ்வகைப் பொருட்களிலும் தொழுநோய் காணப்பட்டால், அது எப்படி சுத்தமாகும் அல்லது தீட்டுள்ளதாகும் என்பதற்கு இதுவே சட்டமாம் என்று ( ஆண்டவர் ) திருவுளம் பற்றினார்.