Indian Language Bible Word Collections
Lamentations 3:16
Lamentations Chapters
Lamentations 3 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Lamentations Chapters
Lamentations 3 Verses
1
|
முன்றாம் புலம்பல்: ஆலேஃப்: அவருடைய கோபத்தின் கோலால் வருந்தி என் வறுமையைக் காணும் மனிதன் ஆனேன்; |
2
|
அவர் என்னை ஒளியிலன்று, காரிருளிலேயே கொண்டுவந்து விட்டுவிட்டார்; |
3
|
நாள் முழுதும் மீண்டும் மீண்டும் என் மேலேயே தமது கையை நீட்டித் தண்டிக்கிறார். |
4
|
பேத்: என் தோலையும் சதையையும் சிதைத்து விட்டார், என்னுடைய எலும்புகளை நொறுக்கி விட்டார்; |
5
|
என்னை வளைத்து முற்றுகையிட்டுத் துன்பத்தாலும் கசப்பாலும் நிரப்பி விட்டார்; |
6
|
என்றென்றைக்கும் மரித்தவர்களுக்கு ஒப்பாய் என்னை காரிருள் நிறைந்துள்ள இடத்தில் வைத்தார். |
7
|
கீமேல்: வெளியேற முடியாமல் என்னைச் சுற்றிச் சுவர் எழுப்பி என் கைவிலங்கையும் பளுவாக்கினார்; |
8
|
கூவியழைத்தும் இரந்து மன்றாடியும், என் மன்றாட்டைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டார். |
9
|
சதுரக் கற்களால் என் வழிகளைத் தடுத்து விட்டார்; என் பாதைகளைக் கோணலாக்கிக் கெடுத்துவிட்டார். |
10
|
தாலேத்:பாய்வதற்காகப் பதுங்கியிருக்கும் கரடி போலும், ஒளிந்திருக்கும் சிங்கம் போலும் எனக்கு ஆனார்; |
11
|
என் வழிகளைப் புரட்டி என்னைப் பீறிக் கிழித்தார்; என்னை முற்றிலும் பாழாக்கினார்; |
12
|
தமது வில்லை நாணேற்றினார், என்னை அம்புக்கு இலக்காக்கினார். |
13
|
ஹே: தமது அம்பறாத் தூணியில் உள்ள அம்புகைளை என் மார்பில் எய்தார்; |
14
|
என் இனத்தார் அனைவர்க்கும் முற்றிலும் நான் நகைப்புக்கும் வசைப் பாடலுக்கும் இலக்கானேன்; |
15
|
கசப்பினால் என்னை நிரம்பச் செய்தார், கசப்பு மதுவால் எனக்குப் போதை ஏற்றினார். |
16
|
வெள: கற்களைக் கடித்து என் பற்களை உடையச்செய்தார், சாம்பலை உணவாக எனக்கு ஊட்டினார்; |
17
|
என் ஆன்மா அமைதியை இழந்துவிட்டது, எனக்கு மகிழ்ச்சி என்றால் என்ன என்பது மறந்துபோயிற்று. |
18
|
என் வலிமைக்கு முடிவு வந்தது, ஆண்டவர் மேலுள்ள என் நம்பிக்கையும் போயிற்று" என்றேன். |
19
|
ஸாயின்: என் வறுமையையும் அலைச்சலையும் கசப்பையும், தாங்க முடியாத துன்பத்தையும் நினைத்தருளும்; |
20
|
நான் அதையே நினைத்து நினைத்து வாடுகிறேன், என் உயிர் என்னில் மாய்கிறது; |
21
|
இவற்றை என்னிதயத்தில் சிந்திக்கிறேன், ஆகவே நம்பிக்கை கொள்ளுகிறேன். |
22
|
ஹேத்: ஆண்டவரின் இரக்கம் என்றென்றும் அழிவுறாது, அவருடைய பரிவுக்கு முடிவு இல்லை. |
23
|
காலைதோறும் அவை புதுப்பிக்கப் படுகின்றன, நீர் மிக்கப் பிரமாணிக்கமுள்ளவர்; |
24
|
ஆண்டவர் என் பங்கு, ஆதலால் அவரிடம் நம்பிக்கை வைப்பேன்" என்றது என் ஆன்மா. |
25
|
தேத்: தம்மில் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடும் ஆன்மாவுக்கும் ஆண்டவர் நல்லவர்; |
26
|
கடவுள் நம்மை மீட்பாரென்று, அமைதியாய்க் காத்திருத்தல் நல்லது; |
27
|
இளமை முதல் அவரது நுகத்தைச் சுமந்து கொள்ளுதல் மனிதனுக்கு நன்று; |
28
|
இயோத்: தன்மேல் அதனைச் சுமந்து கொண்ட பின் தனிமையில் அமைதியாய் அமர்ந்திருக்கட்டும்; |
29
|
தரையில் முகம்படியக் குப்புற விழட்டும், நம்பிக்கைக்கு இன்னும் இடமிருக்கலாம்; |
30
|
தன்னை அறைபவர்க்கும் கன்னத்தைக் காட்டட்டும், நிந்தைகளால் அவன் நிரம்பட்டும், |
31
|
காஃப்: ஏனெனில் ஆண்டவர் எப்போதைக்குமே ஒருவனை வெறுத்துத் தள்ளுவதில்லை; |
32
|
ஒருவேளை அவனைத் தள்ளினாலும் பின்னர் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்பத் தயை கூருவார். |
33
|
ஏனெனில் மனப்பூர்வமாய் அவர் மனிதர்களைத் தாழ்த்தினதுமில்லை, தள்ளிவிட்டதுமில்லை. |
34
|
லாமேத்: உலகத்தின் கைதிகள் எல்லாரும் காலின் கீழ் நசுக்கப்படுவதையோ, |
35
|
உன்னதரின் திருமுன்பு ஒருவனுக்கு நியாயம் மறுக்கப்படுவதையோ, |
36
|
ஒரு மனிதன் வழக்கில் கவிழ்க்கப் படுவதையோ ஆண்டவர் பாராமல் இருக்கிறாரோ? |
37
|
மேம்: ஆண்டவரின் ஆணையில்லாமல், தன் சொல்லால் மட்டும் ஒன்றை நிகழும்படி செய்யக் கூடியவன் யார்? |
38
|
நன்மைகளும் தீமைகளும் உன்னதரின் வாயிலிருந்தன்றோ புறப்படுகின்றன? |
39
|
மனிதன் எதற்காக முறையிட வேண்டும்? தன் பாவங்களின் முன் ஆண்மையோடு இருக்கட்டும். |
40
|
நூன்: நம் வழிகளைச் சோதித்துச் சிந்தித்து, ஆண்டவரிடம் திரும்பிடுவோம். |
41
|
ஆண்டவர்பால் வானகத்துக்கு நம்முடைய இதயங்களையும் கைகளையும் உயர்திதிடுவோம். |
42
|
நாங்கள் அக்கிரமம் செய்தோம், உமக்குக் கோப மூட்டினோம்; ஆதலால் தான் எங்களை நீர் மன்னிக்கவில்லை. |
43
|
சாமேக்: "கோபத்தால் உம்மைப் போர்த்துக் கொண்டு எங்களை விரட்டி வந்து இரக்கமின்றிக் கொன்று மாய்த்தீர். |
44
|
எங்கள் மன்றாட்டு உம்மிடம் வராதபடி, உம்மை மேகத்தால் மறைத்துக்கொண்டீர். |
45
|
மக்களினங்களின் மத்தியிலே எங்களைக் குப்பை கூளங்களாய் ஆக்கிவிட்டீர். |
46
|
பே: "எங்கள் பகைவர்கள் அனைவரும் எங்களுக்கு விரோதமாய் வாய் திறந்தனர். |
47
|
திகிலும் படுகுழியும் எங்களுக்குத் தயாராயின, நாசமும் அழிவும் எங்கள் மேல் வந்தன. |
48
|
என் மக்களாம் மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் கண்ணீரைப் பெருக்குகின்றன. |
49
|
ஆயீன்: "எங்களுக்கு இளைப்பாற்றி இல்லாமையால் ஒயாமல் கண்கள் நீர் வடிக்கின்றன. |
50
|
ஆண்டவர் வானத்தினின்று நோக்கும் வரையில் தொடர்ந்து அவ்வாறே நீர் வடிக்கும். |
51
|
என் நகரத்தின் மகளிர் அனைவர்க்கும் நேர்ந்ததைக் காண்பது எனக்குப் பெரும் துயரமாகும். |
52
|
சாதே: "காரணமின்றி என் பகைவர்கள் பறவையைப் போல வேட்டையாடி என்னைப் பிடித்தார்கள். |
53
|
என்னை உயிரோடு குழியில் தள்ளினார்கள், என்மீது கற்களை எறிந்தார்கள். |
54
|
வெள்ளப் பெருக்கு என் தலை மீது ஓடிற்று; 'நான் மடிந்தேன்' என்றேன். |
55
|
கோப்: "ஆண்டவரே, ஆழமான பாதாளத்தினின்று உமது திருப்பெயரைக் கூவியழைத்தேன்; |
56
|
என் குரலொலியைக் கேட்டீர்; என் விம்மலுக்கும் கூக்குரல்களுக்கும் உம் செவியைத் திருப்பிக் கொள்ளாதீர், |
57
|
உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில் என்னை அணுகி, 'அஞ்சாதே' என்றீர். |
58
|
ரேஷ்: "ஆண்டவரே, எனக்காக வாதாடினீர்; நீரே என் உயிருக்கு மீட்பளித்தீர். |
59
|
எனக்கெதிராய் அவர்கள் செய்த அக்கிரமத்தைக் கண்டீர், ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும். |
60
|
எனக்கெதிராய் அவர்கள் கொண்டிருக்கும் ஆத்திரத்தையும் எண்ணங்களையும் பார்த்தீர். |
61
|
ஷின்: "ஆண்டவரே, எனக்கெதிராய் அவர்கள் கொண்டுள்ள சிந்தனைகளையும் சொன்ன நிந்தைகளையும் கேட்டீர். |
62
|
என் பகைவர்கள் எனக்கெதிராய் நாள் முழுதும் முணு முணுத்த சொற்களை நீர் கேட்டீர். |
63
|
பாரும், அவர்கள் உட்கார்ந்தாலும் எழுந்தாலும், என்னைப் பற்றியே அவர்கள் வசை பாடுகிறார்கள். |
64
|
தௌ: "ஆண்டவரே, அவர்களுடைய செயலுக்கு எற்ப அவர்களுக்குக் கைம்மாறு தந்தருளும். |
65
|
இதய கடினத்தை அவர்களுக்குக் கொடும். உமது சாபனை அவர்கள் மேல் இருக்கட்டும். |
66
|
ஆண்டவரே, சீற்றத்துடன் அவர்களைத் துன்புறுத்தும், வானத்தின் கீழ் அவர்களை நசுக்கி விடும்." |