அபிமெலேக்குக்குப்பின், எபிராயிம் மலைநாட்டுச் சாமிர் ஊரில் வாழ்ந்த இசாக்கார் கோத்திரத்தானான அபிமெலேக்கின் சிற்றப்பன் பூவாவின் மகன் தோலா இஸ்ராயேலை ஆண்டுவந்தான்.
அவருக்கு முப்பது புதல்வர் இருந்தனர். இவர்கள் முப்பது கழுதைக் குட்டிகளின்மேல் அமர்ந்து முப்பது நகர்களுக்குத் தலைமை வகித்து வந்தனர். எனவே, அந்நகரங்கள் காலாதில் இது வரை யாயிர் நகர்கள் என்று பொருள் படும் ஆவோத்-யாயிர் என்று அழைக்கப்படுகின்றன.
அன்னிய தேவர்களின் எல்லாச் சிலைகளையும் தங்கள் எல்லைக்கு அப்பால் எறிந்து விட்டுத் தங்கள் ஆண்டவராகிய கடவுளை வழிபட்டனர். அப்போது அவர் இஸ்ராயேலின் இழிநிலை கண்டு இரங்கினார்.
பின்னர் அம்மோன் புதல்வர் அர்ப்பரித்துக் காலாத் நாட்டில் கூடாரங்களை அடித்தனர். அவர்களுக்கு எதிராக இஸ்ராயேல் மக்கள் ஒன்றாய்க் கூடி மாஸ்பாவிலே பாளையமிறங்கினர்.
அப்போது காலாத்தின் மக்கட் தலைவர்கள், "அம்மோன் புதல்வரை நமக்குள் முதன் முதல் எதிர்க்கத் தொடங்குபவனே காலாத் மக்களின் தலைவன் ஆகட்டும்" என்று ஒருவர் ஒருவரிடம் கூறினர்.