பிறகு ஆண்டவர் யோசுவாவைப் பார்த்து, "நீ அஞ்சாது தைரியமாய் இரு. போர்வீரர் எல்லோரையும் ஒன்று திரட்டி ஆயி நகருக்குப்போ. இதோ அதன் அரசனையும் குடிகளையும் நகரையும் நாட்டையும் நாம் உன் கையில் ஒப்படைத்தோம்.
நீ எரிக்கோவிற்கும் அதன் அரசனுக்கும் செய்தது போல் ஆயி நகருக்கும் அதன் அரசனுக்கும் செய். அதில் கொள்ளையிடப்படும் பொருட்களையும் எல்லா உயிரினங்களையும் உங்கள் உடைமையாகக் கொள்ளலாம். நகருக்குப் பின் புறம் பதிவிடை வைப்பாய்" என்றார்.
அப்போது ஆயி நகருள் போக, யோசுவாவும் அவரோடு போர்வீரர் எல்லாரும் புறப்பட்டனர். முப்பதாயிரம் திறமை மிக்க போர் வீரரை யோசுவா தேர்நதெடுத்து அன்று இராவிலேயே அவர்களை அனுப்பி வைத்தார்.
அவர் அவர்களுக்கு இட்டிருந்த கட்டளையாவது: "நீங்கள் நகருக்குப் பின்புறமாகச் சென்று பதுங்கியிருக்க வேண்டும். வெகுதூரம் போக வேண்டாம். அங்கு நீங்கள் அனைவரும்
எச்சரிக்கையாய் இருங்கள். நானும் என்னுடன் உள்ள மீதிச் சேனையும் நேராய்ச் சென்று நகருக்கு அருகே போவோம். பிறகு அவர்கள் எங்களை எதிர்க்கப் புறப்பட்டு வரும் போது, நாங்கள் முன் செய்தது போல் புறமுதுகு காட்டி ஒடுவோம்.
நாங்கள் முன் போலத் தங்களுக்கு அஞ்சி ஒடுவதாக எண்ணி அவர்கள் எங்களைத் துரத்த முற்படுவார்கள். அப்பொழுது அவர்கள் நகரிலிருந்து சற்றுத் தூரம் வரும்வரை ஒடி வருவோம்.
இவ்வாறு நாங்கள் ஒடி வர, அவர்கள் எங்களைத் துரத்தும்போது, நீங்கள் பதிவிடையிலிருந்து எழுந்து நகரைப் பாழாக்க வேண்டும். ஏனெனில் உங்கள் ஆண்டவராகிய கடவுள் அதை உங்கள் கைகளில் ஒப்படைப்பார்.
பின் அவர் அவர்களை அனுப்பிவைத்தார். அவர்கள் புறப்பட்டுப் பேத்தலுக்கும் ஆயியிக்கும் நடுவில் ஆயி நகருக்கு மேற்கே பதுங்கியிருக்கப் போனார்கள். யோசுவாவோ அன்று இரவு மற்ற மக்களுடன் தங்கியிருந்தார்.
இவர்கள் நகருக்கு அருகே வந்தபோது ஆயியிக்கும் வடக்கே, நகருக்கும் தாம் இருந்த இடத்திற்கும் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கைக் கண்டு அங்குத் தங்கிக் கொண்டார்கள்.
மற்றப் படைவீரர் அனைவரையும் நகரின் வடக்கு நோக்கி அணி அணியாக நிறுத்தி, இவர்களுடைய கடைசிப் படைகள் நகரின் மேற்புறம் வரை பரவியிருக்கும்படி செய்தார். யோசுவாவோ அன்றிரவே புறப்பட்டுப் பள்ளத்தாக்கில் தங்கினார்.
ஆயியின் அரசன் அதைக் கண்டு, காலையில் நகரிலுள்ள தன் எல்லாப் போர் வீரர்களோடும் விரைவாய் வெளியே வந்து பாலைவனத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினான். தனக்குப் பின் பதிவிடை வைக்கப்பட்டிருந்ததை அவன் அறியாதிருந்தான்.
உடனே யோசுவாவும் அவரோடு இருந்த இஸ்ராயேலர் எல்லாரும் அவர்களுக்கு அஞ்சியது போல் நடித்து அவர்களுக்கு முன்பாக நிலை குலைந்து பாலைவனத்துக்குப் போகும் வழியே ஒட்டம் பிடித்தனர்.
இப்படி அவர்கள் நகருக்குச் சற்றுத்தூரம் போனார்கள். (நகர வாயில்கள் இன்னும் திறந்திருக்க) ஆயி நகரிலும் பேத்தல் ஊரிலும் ஒருவர் கூட மீதியிராது அனைவருமே இஸ்ராயேலரைப் பின் தொடர்ந்திருந்தனர்.
அதன்படி அவர் தம் கேடயத்தைத் தூக்கி நகரைச் சுட்டிக் காட்டினார். உடனே பதுங்கியிருந்த அவருடைய வீரர் விரைந்து எழுந்து நகரில் புகுந்து அதைப் பிடித்துத் தீக்கிரையாக்கினர்.
யோசுவாவைத் தூரத்திச் சென்ற நகர மனிதர் திரும்பிப் பார்த்தபோது, அதோ! நகரிலிருந்து புகை வான்மட்டும் எழும்பக் கண்டு, பாசாங்கு காட்டிப் பாலைவனத்தை நோக்கி ஒடின இஸ்ராயேலர்கள் இப்போது திரும்பி வந்து மிகுந்த துணிவுடன் போருக்கு நிற்கக் கண்டு ஏங்கினர்.
அப்போது நகரைப் பிடித்துச் சுட்டெரித்த யோசுவாவின் வீரர் ஊரிலிருந்து வெளியேறித் தங்கள் சகோதரர்களுக்கு எதிராக வந்தனர். அப்போது நடுவே அகப்பட்டுக் கொண்ட எதிரிகளை ஒழித்துக்கட்டத் தொடங்கினர். இவர்கள் இருமருங்கினின்றும் தாக்குண்டபடியால் ஒருவர் முதலாய்த் தப்பமுடியாமல் எல்லாருமே மாண்டுபோயினர்.
பாலைவனத்தை நோக்கி ஒடிய இஸ்ராயேலரைத் துரத்திச் சென்றவர் அனைவரும் அவ்விதமே வெட்டுண்டு ஒரே இடத்தில் வாளினால் மடிந்தனர். பிறகு இஸ்ராயேலர் ஒன்று கூடி நகர் மக்களையும் கொன்று குவிக்கத் திரும்பினார்கள்.
யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தபடி உயிரினங்களையும் நகரில் அகப்பட்ட கொள்ளைப் பொருட்களையும் இஸ்ராயேல் மக்கள் எடுத்துக் கொண்டு தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.
அந்நகர் அரசனையும் தூக்குமரத்தில் ஏற்றி மாலையில் கதிரவன் மறையும் வரை அதில் தொங்கவிட்டார். பிறகு யோசுவாவின் கட்டளைப்படி இஸ்ராயேலர் அவ்வரசனுடைய உடலை மரத்திலிருந்து இறக்கி நகர வாயிலில் போட்டு, இன்று வரை கிடக்கும் பெரிய கற்குவியலால் அதை மூடினார்கள்.
மேலும் மூப்பரும் தளபதிகளும் நீதிபதிகளும் மக்கள் அனைவரும் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச்செல்லும் குருக்களுக்கு முன்பாக உடன்படிக்கைப் பெட்டியின் இருபுறத்திலும் நிற்க, ஆண்டவரின் அடியானான மோயீசன் கட்டளையிட்டிருந்தபடி, கால்ஜீம் மலையருகில் பாதிப்பேரும், கேபாரி மலையருகில் பாதிப்பேருமாகப் பிரிந்து போனார்கள். அப்போது யோசுவா இஸ்ராயேல் சபையை முதன் முறையாக ஆசீர்வதித்தார்.
மோயீசன் கட்டளையிட்டிருந்தவற்றில் ஒன்றும் விடப்படவில்லை; மாறாக எல்லாவற்றையும், இஸ்ராயேலின் முழுச் சபைக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அவர்கள் நடுவில் வாழ்ந்து வந்த பிறருக்குங்கூட வாசித்தார்.