இஸ்ராயேலைச் சுற்றிலும் இருந்த நாடுகள் அனைத்தும் இஸ்ராயேலுக்கு அடிமைப்பட்டிருந்தமையால் ஆண்டவருடைய அருளால் நாட்டில் நெடுநாளாக அமைதி நிலவியது. அக்காலத்தில் முதிர்ந்த வயதினரான யோசுவா,
இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் பெரியோரையும் மக்கட் தலைவர்களையும் படைத் தலைவர்களையும் போதகர்களையும் அழைத்து அவர்களை நோக்கி, "நான் வயது முதிர்ந்த கிழவனாகிவிட்டேன்.
யோர்தானின் கீழ்ப்புறம் துவக்கிப் பெரிய கடல் வரை இருந்த பரந்த நாட்டையெல்லாம் அவர் சீட்டுப் போட்டு உங்களுக்குப் பங்கிட்டு கொடுத்தார். நீங்கள் இன்னும் வெல்ல வேண்டிய நாடுகள் பல உள.
ஆண்டவர் உங்கள் பார்வையிலிருந்து அவற்றை நீக்கிச் சிதறடிப்பார். ஆதலால் அவர் முன்பு உங்களுக்குச் சொன்னபடியே நீங்கள் அந்நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்வீர்கள்.
அதற்குள் பலமடையுங்கள். மோயீசனின் சட்ட நூலில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நீங்கள் கைக்கொண்டு. அவற்றினின்று சிறிதும் வழுவாது அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதில் உறுதியாயும் கவனமாயும் இருங்கள்.
உங்கள் நடுவில் வாழும் புறவினத்தார் மத்தியில் நீங்கள் புகுந்தபின், அவர்களுடைய தேவர்கள் மேல் ஆணையிடவும் அவர்களுக்குப் பணிபுரியவும், வழிபாடு செய்யவும் ஒருவேளை உங்களுக்குக் கெடுமதி வரும், எச்சரிக்கை!
அப்படிச் செய்தாலன்றோ ஆண்டவராகிய கடவுள் உங்கள் முன்னிலையில் மாபெரும் வலிமை படைத்த இப்புறவினத்தாரை அழித்தொழிப்பார். ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது.
உங்கள் ஆண்டவராகிய கடவுள் இனி அப்புறவினத்தாரை உங்கள் முன்னிலையில் அழித்தொழிக்கமாட்டார் என்றும். அவரது பேரிரக்கத்தால் பெற்றுக் கொண்ட இச்சீரிய நாட்டிலிருந்து கடைசியில் நீங்கள் துரத்தப்பட்டுச் சிதறடிக்கப்படுவீர்கள் என்றும், அதற்கிடையில் அதே புறவினத்தார் உங்களுக்குக் கண்ணியாகவும் வலையாகவும், உங்கள் விலாக்களுக்கு ஆணியாகவும், கண்களில் பட்ட முட்களாகவும் இருப்பார்கள் என்றும் இப்பொழுதே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
இதோ மனிதர் எல்லாரும் போகிற வழியே நான் இன்று போகிறேன். ஆண்டவர் உங்களுக்குத் தருவோம் என்று அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாவது நிறைவேறாமல் போகவில்லை என்பதை நீங்கள் முழுமனத்தோடு அறிந்துகொள்வீர்கள்.
எனவே, ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகள் எல்லாம் தவறாது நிறைவேறி நல்லசெல்வம் எல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தனவோ, அப்படியே உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுடன் செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறி அந்நிய தேவர்களுக்குப் பணிபுரிந்து தொழுது வருவீர்களேயாகில்.
உங்கள் மேல் அவரது கோபம் திடீரென வரும், அப்பொழுது உங்களுக்கு அவர் அளித்துள்ள இச்சீரிய நாட்டிலிருந்து நீங்கள் வெளியேற்றப்படும் வரை, முன்பு அவர் அச்சுறுத்தின தீச்செயல்கள் எல்லாம் உங்கள் மேல் வரச் செய்வார். இறுதியிலே அவர் உங்களுக்குக் கொடுத்துள்ள இச்சீரிய நாட்டிலிருந்து உங்களைத் துரத்திச் சிதறடிப்பார்" என்றார்.