Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Joshua Chapters

Joshua 21 Verses

1 அக்காலத்தில் லேவி கோத்திரத்து வம்சத் தலைவர்கள் குருவாகிய எலெயசாரிடமும் நூனின் மகன் யோசுவாவிடமும் இஸ்ராயேல் மக்களின் ஒவ்வொரு கோத்திரத்து வம்சத் தலைவர்களிடமும் சென்று,
2 கானான் நாட்டிலுள்ள சீலோவில் அவர்களை நோக்கி, "நாங்கள் வாழத் தகுந்த நகர்களையும், எங்கள் கால்நடைகளை வளர்க்கத் தகுந்த பேட்டைகளையும் எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் மோயீசன் மூலம் கட்டளையிட்டிருக்கிறார்" என்றனர்.
3 ஆண்டவரின் கட்டளைக்கு இணங்க இஸ்ராயேல் மக்கள் தம் காணியாட்சியிலுள்ள நகர்களையும் அவற்றையடுத்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தனர்.
4 குருவாயிருந்த ஆரோனின் மக்களான காவாத் வம்சத்திற்குச் சீட்டு விழுந்தது. யூதா, சிமியோன், பெஞ்சமின் என்ற கோத்திரங்களிடமிருந்து பதின்மூன்று நகர்களும்,
5 காவாத்தின் ஏனைய புதல்வருக்கு எபிராயீம், தான் என்ற கோத்திரங்களிடமிருந்தும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திடமிருந்தும், பத்து நகர்களும் கொடுக்கப்பட்டன,
6 பின்பு கெற்சோன் புதல்வருக்குச் சீட்டு விழுந்தது. அதனால் இசாக்கார், ஆசேர், நெப்தலி மனாசேயின் பாதிக்கோத்திரமாகிய இவர்களின் காணியாட்சியிலிருந்து பதின்மூன்று நகர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன.
7 மேராரி புதல்வருக்கு, அவரவர் வம்சங்களின்படியே ரூபன், காத், சபுலோன் முதலியவர்களின் காணியாட்சியிலிருந்து பன்னிரு நகர்கள் அளிக்கப்பட்டன,
8 இந்நகர்களையும் இவற்றை அடுத்த பேட்டைகளையும் இஸ்ராயேல் மக்கள், ஆண்டவர் மோயீசன் மூலம் கட்டளையிட்டிருந்த படியே. திருவுளச்சீட்டுப் போட்டு லேவியருக்குக் கொடுத்தனர்,
9 கீழ்வரும் நகர்களை யோசுவா அவர்களுக்கு அளித்தார், இவை யூதா, சிமியோன் என்ற கோத்திரத்துப் புதல்வருக்குச் சொந்தமாயிருந்தன,
10 அதாவது, முதல் சீட்டைப் பெற்றிருந்த காத் வம்சத்தாரும் லேவியின் வழி வந்தோருமான ஆரோன் புதல்வருக்கு:
11 யூதாவின் மலைநாட்டில் ஏனாக்கின் தந்தையுடைய கரியத்தர்பே என்ற நகரையும், அதன் பேட்டைகளையும் கொடுத்தார். இன்று அந்நகரின் பெயர் எபிரோன்.
12 ஆனால், நகரைச் சேர்ந்த நிலங்களையும் சிற்றூர்களையும் ஜெப்போனேயின் மகன் காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்திருந்தார்.
13 ஆதலால் அடைக்கல நகராய் இருந்த எபிரோன் நகரையும், அதை அடுத்த பேட்டைகளையும் பெரிய குருவான ஆரோனின் புதல்வருக்குக் கொடுத்தார். லொப்னாம் நகர், அதை அடுத்த பேட்டைகள்,
14 ஜேத்தர், எஸ்தேமோ,
15 ஓலோன்,
16 தாபீர், ஐயின், ஜேத்தா, பெத்சமேஸ், அவற்றை அடுத்த பேட்டைகள் முதலியவற்றையும், மேற்சொன்ன இரு கோத்திரங்களின் நகர்கள் ஒன்பதையும் கொடுத்தார்,
17 பெஞ்சமின் கோத்திரத்தாருடைய காபாவோன், காபாயே, அனத்தோத்,
18 ஆல்மோன் ஆகிய நகர்கள் நான்கையும் அவற்றைச் சார்ந்த பேட்டைகளையும்,
19 மொத்தம் பதின்மூன்று நகர்களையும், அவற்றைச் சேர்ந்த பேட்டைகளையும் குருவாயிருந்த ஆரோனின் புதல்வருக்குக் கொடுத்தார்,
20 லேவி கோத்திரத்துக்குக் காத் புதல்வரைச் சேர்ந்த மீதியான வம்சங்களுக்குப் பங்காகத் தரப்பட்ட நகர்களாவன:
21 எபிராயீம் கோத்திரத்திலுள்ள அடைக்கல நகரங்களாவன: எபிராயீம் மலைநாட்டிலுள்ள சிக்கேம் நகரும் அதைச் சேர்ந்த பேட்டைகளும்,
22 காஜேர், கிப்சாயீம், பேத்தரோன் என்ற நகர்களும் அவற்றை அடுத்த பேட்டைகளுமாக நான்கு நகர்களாம்.
23 தான் கோத்திரத்து வீதத்திலே, ஏல்தேக்கோ, கபத்தோன்,
24 அயலோன் கெத்ரேம்மோன் என்ற நான்கு நகர்களும், அவற்றை அடுத்த பேட்டைகளுமாம்.
25 மனாசேயின் கோத்திரத்துக் காணியாட்சியில் பேட்டைகள் உட்படத் தானாக், கெத்ரேம்மோன் ஆகிய இரு நகர்களுமாம்.
26 மொத்தம் பேட்டைகளுடன் பத்து நகர்களே தாழ்ந்த நிலையிலிருந்த காத் புதல்வர்களுக்கு அளிக்கப்பட்டன.
27 லேவி கோத்திரத்துக் கெற்சோன் புதல்வர்களுக்கு மனாசேயின் பாதிக்கோத்திரத்தின் பங்கிலே பாசானிலுள்ள அடைக்கல நகரான கௌலோனும் பொஸ்ராமுமாகிய நகர்கள் இரண்டும், அவற்றைச் சேர்ந்த பேட்டைகளும்,
28 இசாக்காரின் வீதத்திலே கேசியோன், தாபேரேத், ஜாரமொத்,
29 எங்கனிம் ஆகிய நகர்கள் நான்கும் அவற்றின் பேட்டைகளும்,
30 ஆசேரின் காணியாட்சியிலே மசால், அப்தோன், எல்காத்,
31 ரோகோப் ஆகிய நான்கு நகர்களும் அவற்றின் பேட்டைகளும்,
32 நெப்தலியின் சொந்த நாட்டிலே கலிலேயாவிலுள்ள கேதேஸ் என்ற அடைக்கல நகர், ஆமோத்தோர், கர்த்தான் ஆகிய நான்கு நகர்களும் அவற்றின் பேட்டைகளும் கொடுக்கப்பட்டன,
33 மொத்தம், பேட்டைகள் கொண்ட பதின்மூன்று நகர்கள் கேற்சோனின் வம்சங்களுக்குக் கொடுக்கப்பட்டன.
34 மேலும், யோசுவா தாழ்நிலையிலிருந்த லேவியராகிய மேராரி புதல்வரின் வம்சங்களுக்கு அவரவர் குடும்ப வரிசைப்படி சபுலோனின் வீதத்திலுள்ள நான்கு நகர்களைக் கொடுத்தார். அதாவது: ஜெக்னாம்,
35 கர்த்தா, தம்னா, நாவாலோன் என்பனவும், அவற்றை அடுத்த பேட்டைகளுமாம்.
36 மேலும் ரூபன் கோத்திரத்துக்குக் காணியாட்சியைச் சேர்ந்ததும் யோர்தானுக்கு அப்புறத்தில் எரிக்கோவுக்கு எதிரில் உள்ள பாலைவனத்திலிருந்த அடைக்கல நகருமான பொசோருடன்.
37 (36b) மீசோர். யாசேர். எத்சன். மேபாத் என்ற நான்கு நகர்களையும். அவற்றை அடுத்த பேட்டைகளையும்.
38 (37) காத்கோத்திரத்து வீதத்திலே காலாதிலுள்ள அடைக்கல நகர்களாகிய இராமோத், மனாயீம், ஏசெபோன், யாசர் என்ற நான்கு நகர்களையும் அவற்றை அடுத்த பேட்டைகளையும் கொடுத்தார்,
39 (38) மேராரியின் புதல்வர்கள் தம் குடும்பப்படியும், தம் வீட்டு வரிசைப்படியும் மொத்தம் பதின்மூன்று நகர்களைப் பெற்றனர்,
40 40.
41 (39) இவ்வாறு லேவியர்கள் இஸ்ராயேல் மக்களுடைய காணியாட்சியின் நடுவிலே பெற்றுக் கொண்ட நகர்களின் மொத்த எண்ணிக்கை நாற்பத்தெட்டு.
42 (40) இவற்றைச் சேர்ந்த ஊர்களும்கூட அவர்களுக்குக் கிடைத்தன.
43 (41) இவ்விதமாய் ஆண்டவர் 'இஸ்ராயேலுக்குக் கொடுப்போம்' என்று அவர்களுடைய முன்னோருக்கு வாக்களித்திருந்த நாட்டையெல்லாம் கொடுத்தார். அவர்கள் அதைச் சொந்தமாக்கிக் கொண்டு அவற்றில் வாழ்ந்தனர்.
44 (42) மேலும். ஆண்டவரின் இரக்கப் பெருக்கால் அவர்களைச் சுற்றிலுமுள்ள நாடுகளோடு போரின்றி அமைதியாய் வாழ்ந்து வந்தனர். அவர்களின் எதிரிகளிலே எவனும் அவர்களை எதிர்த்து நிற்கத் துணியவில்லை. அவர்கள் எலலாரும் இஸ்ராயேலின் அதிகாரத்திற்கு உட்பட்டு வாழ்ந்தனர்.
45 (43) 'இஸ்ராயேலுக்குக் கொடுப்போம்' என்று ஆண்டவர் கொடுத்திருந்த வாக்குகளில் ஒன்றும் தவறாது நிறைவேறிற்று.
×

Alert

×