இதன் பிறகு நூனின் மகனான யோசுவா ஒற்றர் இருவரை அழைத்து, "நீங்கள் சேத்தீமிலிருந்து மறைவாய்ப் போய் நாட்டையும் எரிக்கோ நகரையும் வேவு பார்த்து வாருங்கள்" என்று அனுப்பினார். இவர்கள் புறப்பட்டுப் போய் இராக்காப் என்ற விலைமாதின் வீட்டில் தங்கினார்கள்.
அதைக் கேட்டு எரிக்கோவின் அரசன் இராக்காபிடம் ஆள் அனுப்பி, "உன்னிடம் வந்து உன் வீட்டில் நூழைந்த ஆட்களை வெளியே வரச் செய்; உண்மையில் அவர்கள் நாடு முழுவதையும் உளவு பார்க்க வந்த ஒற்றரே" என்று சொல்லச் சொன்னான்.
மேலும் இரவில் நகர வாயில் அடைக்கப்படும் வேளையில் அவர்கள் வெளியேறிவிட்டனர். அவர்கள் போன இடம் எனக்குத் தெரியாது. விரைவில் சென்று தேடுங்கள். அவர்களைப் பிடித்து விடலாம்" என்று சொன்னாள்.
ஒளிந்திருந்த ஒற்றர்கள் தூங்குமுன் இராக்காப் மாடிக்குச் சென்று அவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்கள் கையில் இந்நாட்டை ஒப்படைத்து விட்டார் என்று நான் அறிவேன்; ஏனெனில், உங்கள் பெயரைக் கேட்டு நாங்கள் பீதி அடைந்துள்ளோம்.
நீங்கள் எகிப்தை விட்டு வெளியேறிய போது நீங்கள் கடந்து செல்லும் பொருட்டுச் செங்கடலின் தண்ணீரை ஆண்டவர் வற்றச் செய்ததையும், நீங்கள் யோர்தானுக்கு அக்கரையில் கொன்று ஒழித்த அமோறையரின் இரு அரசர்களாகிய செகோனுக்கும் ஓகுக்கும் நிகழ்ந்ததையும் நாங்கள் அறிவோம்.
இவற்றைப்பற்றிக் கேள்வியுற்ற போது நாங்கள் அச்சமுற்றோம்; எங்கள் நெஞ்சம் தளர்ச்சியுற்றது; உங்கள் வருகை கண்டு நாங்கள் அனைவரும் துணிவு இழந்தோம். ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய கடவுள் மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் கடவுளாய் இருக்கிறார்.
நீங்கள் என் தாய் தந்தை, சகோதர சகோதரிகளையும் அவர்களின் உடைமைகளையும் காப்பாற்றுவதோடு எங்கள் உயிரையும் சாவினின்று காப்பாற்றுவீர்கள் என்பதற்கு உறுதி தருவீர்கள் என்றும் இப்பொழுதே ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்லுங்கள்" என்றாள்.
அதற்கு அவர்கள், "நீ எங்களைக் காட்டிக் கொடுக்காமல் இருந்தால் நாங்கள் உயிர் கொடுத்தும் உங்களைக் காப்பாற்றுவோம். ஆண்டவர் எங்களுக்கு இந்நாட்டைக் கொடுக்கும் போது நாங்கள் உண்மையாகவே உனக்கு இரக்கம் காட்டுவோம்" என்று மறுமொழி கூறினார்கள்.
மேலும், அவள் அவர்களை நோக்கி, "உங்களைத் தேடுகிறவர்கள் திரும்பி வரும் வழியில் உங்களைக் கண்டு கொள்ளாதபடி நீங்கள் மலைக்குச் சென்று, அவர்கள் திரும்பி வரும் வரை அங்கே மூன்று நாள் ஒளிந்திருங்கள். பின்பு உங்கள் வழியே போகலாம்" என்றாள்,.
அதற்கு அவர்கள், "நாங்கள் இந்நாட்டைப் பிடிக்க வருவோம். அப்போது இந்தச் சிவப்பு நூற்கயிற்றை எங்களை இறக்கி விட்ட சன்னலிலே நீ அடையாளமாகக் கட்டி வைத்திருக்க வேண்டும்; அத்தோடு உன் தாய் தந்தையாரையும் சகோதரரையும், உன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டில் சேர்த்து வைத்திருக்க வேண்டும்.
அவர்களில் யாரேனும் உன் வீட்டுக்கு வெளியே கொலை செய்யப்பட்டால், அந்த இரத்தப்பழி எங்களை அன்று அவனையே சாரும். ஆனால் உன் வீட்டினுள் இருப்பவர்களில் யாரேனும் கொலை செய்யப்பட்டால், அந்த இரத்தப்பழி எங்களைச் சாரும்.
நீ எங்களுக்கு எதிராகச் சதிசெய்து, நாங்கள் சொன்னவற்றை வெளியிட்டால், நாங்கள் உனக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி நடக்க மாட்டோம்" என்றனர். அதற்கு அவள், "நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்" என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டாள்.
ஒற்றர்கள் நடந்து மலையை அடைந்து. தங்களைத் தேடுகிறவர்கள் திரும்பி வரும் வரை மூன்று நாள் அங்கே இருந்தனர். அவர்களைப் பிடிக்க அனுப்பப்பட்ட ஆட்கள் வழியெல்லாம் தேடியும் அவர்களைக் காணவில்லை.
எனவே, நகருக்குத் திரும்பி வந்தனர். பின்பு, ஒற்றர்கள் மலையிலிருந்து இறங்கித் தங்கள் ஊரை நாடி யோர்தான் நதியைக் கடந்து நூனின் மகன் யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு நேரிட்டதை எல்லாம் விரிவாக எடுத்துரைத்தனர்.