மேற்சொன்ன நகர்களைச் சுற்றிலும் தெற்கே இருக்கிற பாலாவாத்- பேவர்- இராமாத் வரையுள்ள எல்லாச் சிற்றூர்களும். இவை சிமியோன் புதல்வரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
யூதா புதல்வரின் பங்கு வீதம் அவர்களுக்கு மிகப் பெரியதாயிருந்ததால், மேற்சொன்ன நகர்களும் ஊர்களும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப் பெற்றன. எனவே, சிமியோன் புதல்வர் யூதா புதல்வர் நடுவே காணியாட்சி பெற்றனர்.
அவரவர் வம்சங்களின்படி, கிடைத்த எல்லைகளாவன: எலேப், சானானீமிலுள்ள எலோன், ஆதமி என்ற நேக்கேப், ஜெப்னாயேல் ஊர்கள் தொடங்கி லேக்கு வரை போய், யோர்தானில் வந்து முடியும்.
மேலும் அவ்வெல்லை ஆசனேத்தாபோர் நோக்கி மேற்கே திரும்பி, அங்கிருந்து உக்குக்காவுக்குச் சென்று, தெற்கே சபுலோனைக் கடந்து, மேற்கே ஆசேர் நடுவிலும், சூரியன் உதிக்கும் திசையில் யோர்தானின் பக்கத்தில் யூதா நடுவிலும் போகிறது.
இந்த எல்லையோடு முடிந்தது. தானின் புதல்வர் எழுந்து புறப்பட்டுப் போய் லெசேம் நகருடன் போரிட்டு அதைக் கைப்பற்றினர். வாளினால் கொன்று குவித்து அதைச் சொந்தமாக்கி அதில் குடியேறினர். லெசேமுக்குத் தங்கள் மூதாதையின் பெயரைச் சேர்த்து லெசேம்தான் என்று பெயரிட்டு அழைத்தனர்.
திருவுளச் சீட்டின் மூலம் வம்ச வரிசைப்படி ஒவ்வொரு கோத்திரத்துக்கும் நாட்டை பங்கிட்டு கொடுத்த பின்பு, இஸ்ராயேல் மக்கள் நூனின் மகன் யோசுவாவுக்குத் தம் நடுவில் ஒரு சொந்தக் காணியைக் கொடுத்தனர்.
எபிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த தம்னாத் சாரா என்ற இடமே அவர் பெற்றது. யோசுவா அதைக் கேட்டிருந்தார். ஆண்டவருடைய கட்டளைப்படி மக்களும் அதை அவருக்குக் கொடுத்தனர். அவர் அங்கு ஒரு நகரைக்கட்டி அதில் குடியேறினார்.