யூதாவின் புதல்வருக்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி கிடைத்த பங்கு வீதமாவது: ஏதோமுக்குத் தெற்கேயுள்ள சீன் என்ற பாலைவனம் துவக்கித் தென்புறத்துக் கடைசி எல்லை வரையாகும்.
அங்கிருந்து விருச்சிக மலைக்கும், அங்கிருந்து சீனுக்கும் போய், காதேஸ்பார்னேய்க்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து ஆதாருக்கு எழும்பிக் கல்காவைச் சுற்றிப்போன பின்பு,
பின்னர் ஆக்கோர்ப் பள்ளத்தாக்கிலிருக்கிற தெபறு எல்லைகளை அடைந்து வடக்கேயுள்ள கல்காவுக்கு நேராய்ப் போகும்: கல்கா, அதொம்மிம் மலைக்கு எதிரே ஆற்றின் தென்புறத்தில் இருக்கிறது. பிறகு சூரியன் ஊற்று என்று அழைக்கப்பட்ட நீர்த்திடலைக் கடந்து ரோகல் என்ற கிணற்றுக்குச் சென்று,
அங்கிருந்து என்னொமின் மகனுடைய பள்ளத்தாக்கு வழியே போய், எபுசேயர் நாட்டிற்குத் தெற்கே சென்று யெருசலேம் நகரை அடைந்தபின், மேற்கிலிருக்கிற கெனோக்கு எதிரே இருக்கிற மலை மேல் ஏறி வடக்கிலுள்ள ராபாயிம் பள்ளத்தாக்கைத் தாண்டி,
அம்மலையின் உச்சியிலிருந்து நெப்தோவா எனப்படும் நீருற்றுக்குப் போய் எபிரோன் மலையின் ஊர்களுக்குச் சென்று பாலாவாகிய காரியத்தியாரீம், அதாவது, காடுகளின் நகரை அடையும்.
பாலாவை விட்டு மேற்கே செயீர் மலை வரை சுற்றிப் போய், பிறகு, வடக்கே கெஸ்லோன் முகமாயுள்ள யாரீம் மலைப்பக்கத்தில் சென்று பெத்சதமேசில் இறங்கித் தம்மனாவுக்குப் போய்,
வடக்கே சென்று அக்கரோனின் பக்கத்திலே திரும்பிச் சேக்கிரோனானை நோக்கி இறங்கி, அங்கிருந்து பாலா மலையைத் தாண்டி ஜெப்னெல் போய் மேற்கேயுள்ள பெரிய கடலோரத்தில் முடியும்.
ஆண்டவருடைய கட்டளையின்படியே ஜெப்போனேயின் மகன் காலேபுக்கு, யூதாவின் புதல்வருடைய பூமியின் நடுவே ஏனாக்கின் தந்தையினுடைய காணியாட்சியாகிய காரியாத்அர்பே என்ற எபிரோனை யோசுவா கொடுத்தார்.
அவர்கள் ஒன்றாய்ப் புறப்பட்டுச் செல்லும் வழியில், " உன் தந்தையிடம் ஒரு வயலைக் கேள்" என்று அவள் கணவன் அக்சாமைத் தூண்டினான். எனவே அவள் கழுதையின் மேல் சவாரி போகையில் பெருமூச்சு விடத் தொடங்கினாள். அதைக்கேட்டுக் காலேப் அவளை நோக்கி," ஏன்?" என்று வினவினான்.
அதற்கு அவள், "எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும். அதாவது, தென்புறத்திலிருக்கும் வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர் அன்றே ? அத்தோடு நீர்வளமுள்ள ஒரு நிலத்தையும் எனக்குத் தரவேண்டும்" என்றாள். அப்பொழுது காலேப் அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்வளமுள்ள மற்றொரு நிலத்தைக் கொடுத்தான்.
யெருசலேமில் குடியிருந்த ஜெபுசையரை யூதா புதல்வர் அழித்தொழிக்க முடியாது போயிற்று. ஆகையால் இன்று வரை ஜெபுசையர் யூதா புதல்வரோடு யெருசலேமில் வாழ்ந்து வருகின்றனர்.