யோர்தானின் அக்கரைப் பகுதிக்குக் கிழக்கே ஆர்னோன் ஆறு துவக்கி ஏர்மோன் மலைநாடு வரையிலும், கிழக்கே பாலைவனத்தை நோக்கியிருக்கும் எல்லா நாட்டையும், அதுவரை உள்ள எல்லைக்குள் இருந்த அரசர்களையும் இஸ்ராயேல் மக்கள் முறியடித்து அவர்களுடைய நாடுகளையும் உரிமையாக்கிக் கொண்டார்கள். அவ்வரசர்கள் விவரம் பின்வருமாறு:
அமோறையரின் அரசனான செகோன் எசெபோனில் வாழ்ந்து வந்தான். இவனுடைய அரசு ஆர்னோன் ஆற்றங்கரையிலிருந்த ஆரோயேர் நகர் துவக்கி ஆற்றங்கரை நடுவிலுள்ள பள்ளத்தாக்கிலும், பாதிக் கலயாத்திலும், அம்மோன் மக்களுடைய எல்லையாகிய ஜாபோக் என்ற ஆறுவரையும் பரவியிருந்தது.
(மற்றொரு பக்கம்) பாலைவனம் முதல் கிழக்கேயுள்ள கெனரோத் கடல் வரையும், பெத்சிமோத்துக்குப் போகும் வழியாய்க் கீழ்த்திசையிலிருக்கிற பாலைவனக் கடலாகிய உப்புக் கடல் வரையும், தென்புறத்தில் அசெரோத் பஸ்காவுக்குத் தணிவாக உள்ள நாடு வரையும் பரவியிருந்தது.
இவ்விரு அரசர்களை ஆண்டவரின் அடியானான மோயீசனும் இஸ்ராயேல் மக்களும் அவர்கள் நாட்டை ரூபானியருக்கும், காதியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் சொந்தமாகக் கொடுத்திருந்தார்.
யோர்தானுக்கு இப்புறத்தில் மேற்றிசையிலுள்ள லிபானின் நாட்டிலிருக்கும் பால்காத் முதல் செயீருக்குப்போகும் வழியாகிய மலைப்பகுதி வரையுள்ள நாட்டை யோசுவாவும் இஸ்ராயேல் மக்களும் கைப்பற்றிய பின், யோசுவா கோத்திரங்களின் படி அதைப் பங்குப் பங்காய்ப் பிரித்து இஸ்ராயேலருக்குச் சொந்தமாகக் கொடுத்துவிட்டார்.