ஏனெனில், ஆண்டவரின் தூதர் அக்குளத்தினுள் சிலவேளைகளில் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவன், எவ்வித நோயுற்றிருந்தாலும் குணமடைவான்.
இப்படிச் சொன்னதால், யூதர்கள் அவரைக் கொல்ல வேண்டுமென்று மேலும் உறுதிபூண்டனர். ஏனெனில், ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதோடு கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று சொல்லி, தம்மைக் கடவுளுக்குச் சமமாக்கிவந்தார்.
இயேசு அவர்களை நோக்கிக் கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மகன் தாமாகவே ஒன்றும் செய்ய முடியாது. தந்தை செய்யக் காண்கிறதையே செய்வார். எதெதை அவர் செய்கிறாரோ, அதையெல்லாம் மகனும் அவ்வாறே செய்கிறார்.
தந்தை மகனை நேசித்து, தாம் செய்வதெல்லாம் அவருக்குக் காட்டுகிறார். இவற்றிலும் பெரிய செயல்களை அவருக்குக் காட்டுவார்; அவற்றைக் கண்டு நீங்களும் வியப்புறுவீர்கள்.
எல்லாரும் தம்மை மதிப்பதுபோல மகனையும் மதிக்கவேண்டுமென்று, தீர்ப்பிடும் உரிமை முழுவதையும் தந்தை மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவன் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பதில்லை.
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எனது வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரிடத்தில் விசுவாசம் கொள்பவன், முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். அவன் தீர்ப்புக்குள்ளாகாமல், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்துசென்றுவிட்டான்.
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நேரம் வருகின்றது, - ஏன், வந்தேவிட்டது. - அப்பொழுது கடவுளுடைய மகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர்.
நானாகவே ஒன்றும் செய்ய முடியாது; தந்தை சொற்படியே தீர்ப்பிடுகிறேன். என் தீர்ப்பு நீதியானது. ஏனெனில், என் விருப்பத்தை நாடாமல், என்னை அனுப்பியவர் விருப்பத்தையே நாடுகிறேன்.
அருளப்பருடைய சாட்சியத்திலும் மேலான சாட்சியம் எனக்கு உண்டு: நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று.
இங்ஙனம், என்னை அனுப்பின தந்தையே என்னைப்பற்றிச் சாட்சியம் தந்துள்ளார். ஆயினும் நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவர் உருவத்தைக் கண்டதுமில்லை;