பாஸ்காத் திருவிழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டதென்று இயேசு அறிந்திருந்தார். உலகிலிருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்திருந்த அவர், இறுதிவரை அவர்கள்மேல் அன்புகூரலானார்.
இயேசு அவரை நோக்கி, "குளித்துவிட்டவன் தன் பாதங்களைமட்டும் கழுவினால் போதும்; மற்றப்படி அவன் முழுவதும் தூய்மையாயிருக்கிறான். நீங்களும் தூய்மையாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் தூய்மையாயில்லை" என்றார்.
அவர்களுடைய பாதங்களைக் கழுவியபின், அவர் தம் மேலாடையை அணிந்துகொண்டு, மீண்டும் பந்தியில் அமர்ந்து, அவர்களை நோக்கிக் கூறினார்: "நான் உங்களுக்குச் செய்தது இன்னதென்று விளங்கிற்றா ?
நான் சொல்வது உங்கள் எல்லோரையும்பற்றி அன்றி; நான் தேர்ந்துகொண்டவர்கள் எனக்குத் தெரியும். ஆனால், ' என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான் ' என்ற மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டும்.
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்."
இப்படிச் சொன்னபின், இயேசு மனக்கலக்கத்தோடு, "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்று வெளிப்படையாகக் கூறினார்.
யூதாசிடம் பொதுப்பணம் இருந்ததால், "திருநாளுக்கு வேண்டியதை வாங்கிவா," அல்லது "ஏழைகளுக்கு ஏதாவது கொடு" என்று இயேசு அவனுக்குச் சொல்லியிருக்கலாம் எனச் சிலர் எண்ணிக்கொண்டனர்.
"அன்புச் குழந்தைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். என்னைத் தேடுவீர்கள்; நான் யூதர்களுக்குச் சொன்னதுபோல் உங்களுக்கும் இப்பொழுது சொல்லுகிறேன்: நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது.
நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.
அப்போது சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, எங்குச் செல்லுகிறீர் ?" என்றார். இயேசு மறுமொழியாக, "நான் செல்லுமிடத்திற்கு என்னைப் பின்தொடர இப்பொழுது உன்னால் முடியாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்றார்.