அவனுக்கே காவலன் வாயிலைத் திறந்துவிடுகிறான்; ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன. அவன் தன் சொந்த ஆடுகளைப் பெயர்சொல்லிக் கூப்பிட்டு வெளியில் ஓட்டுகின்றான்.
ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான்; ஏனெனில், கூலியாள் கூலியாள்தான்; ஆடுகளின்மீது அவனுக்கு அக்கறையில்லை. ஓநாய் வந்து ஆடுகளை அடித்துக்கொண்டு போகிறது, மந்தையைச் சிதறடிக்கிறது.
இக்கிடையைச் சேராத வேறு ஆடுகள் எனக்கு உள்ளன. அவற்றையும் நான் கூட்டிச் சேர்க்கவேண்டும். அவை என் குரலுக்குச் செவிகொடுக்கும். ஒரே ஆயனும் ஒரே மந்தையும் உண்டாகும்.
எனது உயிரை என்னிடமிருந்து பறிப்பவன் எவனுமில்லை; நானாகவே என் உயிரைக் கையளிக்கிறேன். உயிரைக் கையளிக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு; இதுவே என் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட கட்டளை."
இயேசுவோ, "தந்தையின் ஆற்றலால் மேலான செயல்கள் பல உங்களுக்குச் செய்துகாட்டியிருக்கிறேன். அவற்றில் எச்செயலுக்காக என்னைக் கல்லால் எறியப்போகிறீர்கள் ?" என்று கேட்டார்.
அவ்வாறிருக்க, தந்தையால் அர்ச்சிக்கப்பெற்று உலகிற்கு அனுப்பப்பட்ட நான், என்னைக் ' கடவுளின் மகன் ' என்று சொன்னதற்காக, ' தெய்வ நிந்தனை செய்கிறாய் ' என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் ?
ஆனால், நான் அவற்றைச் செய்தால் என்னை விசுவசிக்காவிட்டாலும், என் செயல்களையாவது விசுவசியுங்கள்; இங்ஙனம், தந்தை என்னிலும், நான் தந்தையிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், அவ்வறிவில் நிலைகொள்வீர்கள்."
அவர் அங்குத் தங்கியிருந்தபோது, பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், "அருளப்பர் ஓர் அருங்குறியும் செய்யவில்லை; ஆனால் அருளப்பர் இவரைப்பற்றிக் கூறியதெல்லாம் மெய்யாயிற்று" என்று பேசிக்கொண்டார்கள்.