அப்போது ஆண்டவர் சாத்தானை நோக்கி, "நம் ஊழியனாகிய யோபுவைக் கவனித்தாயா? அவனைப் போல் மாசற்றவனும் நேர்மையுள்ளவனும் கடவுளுக்கு அஞ்சித் தீமையை விலக்கி நடக்கிறவனும் வேறெவனும் இவ்வுலகில் இல்லை! காரணமின்றி அவனை அழிக்கும்படியாக நம்மை அவனுக்கு எதிராக நீ தூண்டிவிட்டிருந்தும், அவன் இன்னும் குற்றமற்றவனாகவே நிலைத்திருக்கிறான், பார்" என்றார்.
ஆனால் நீர் உம் கையை ஓங்கி, அவன் எலும்பையும் சதையையும் தொடுவீராயின், அந்நொடியிலேயே அவன் உமது முகத்தின் முன்பே உம்மைப் பழித்துரைக்கிறானா இல்லையா என்று பாரும்" என்றான்.
அப்போது அவர் மனைவி அவரைப் பார்த்து, "இன்னும் உமது மாசற்ற தன்மையில் நிலைத்திருக்கப் போகிறீரா? கடவுளைப் பழித்துரைத்துவிட்டுச் செத்துப் போவதுதானே!" என்றாள்.
நீ ஒரு பைத்தியக் காரியைப்போல் பேசுகிறாயே! நாம் கடவுளின் கையிலிருந்து நன்மையைப் பெறலாம், தீமையை மட்டும் பெறக்கூடாதா?" என்றார். இவற்றில் எல்லாம் யோபு தம் வாயால் பாவமான வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை.
இப்படியிருக்க, யோபுவின் மூன்று நண்பர்கள்- தேமானியனான ஏலிப்பாஸ், சுகீத்தனான பால்தாத், நாகாமத்தீத்தனான சோப்பார் ஆகியோர்- யோபுவுக்கு நேரிட்ட இந்தத் தீமைகளை எல்லாம் கேள்விப்பட்டு, அவரைக் கண்டு அவருக்கு ஆறுதல் சொல்லும்படி தங்களுக்குள் ஆலோசனை செய்து கொண்டு தத்தம் ஊரிலிருந்து புறப்பட்டு வந்தனர்.
அவர்கள் தொலைவிலிருந்து பார்த்த போது அவரை அடையாளம் கண்டு கொள்ளவே அவர்களால் முடியவில்லை; அவர்கள் கதறியழவும், தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, வானத்தை நோக்கித் தங்கள் தலைமேல் புழுதியை வாரிப் போட்டுக் கொள்ளவும் தொடங்கினர்.
அவருக்கு நேர்ந்த துன்பம் மிகவும் கொடியது எனக் கண்டு, ஒருவரும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் ஏழு இரவும் ஏழு பகலும் அவரோடு கூடத் தரையில் உட்கார்ந்திருந்தனர்.