Indian Language Bible Word Collections
Job 19:22
Job Chapters
Job 19 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 19 Verses
1
|
அதற்கு யோபு சொல்லிய மறுமொழி இது: |
2
|
இன்னும் எவ்வளவு நேரம் என்னை வதைப்பீர்கள்? வார்த்தைகளால் என்னை நொறுக்குவீர்கள்? |
3
|
பத்து முறைகள் என் மேல் வசைமாரி பொழிந்தீர்கள்; என் மனத்தைப் புண்படுத்த உங்களுக்கு வெட்கமாயில்லையா? |
4
|
அப்படியே நான் குற்றம் புரிந்தது உண்மையாயினும், என் குற்றம் என்னைத் தானே சாரும். |
5
|
எனக்கெதிராய் நீங்கள் உங்களையே பெரியவர்களாக்கி, என் தாழ்மை நிலையைக் காட்டி என் குற்றத்தை எண்பிக்கிறீர்களே; |
6
|
கடவுள் தான் என்னை அந்த நெருக்கடிக்குள் செலுத்தினாரென்றும், வலை விரித்து என்னை மடக்கினாரென்றும் அறிந்து கொள்ளுங்கள். |
7
|
இதோ, நான் 'கொடுமை கொடுமை' எனக் கதறியும் கேட்பாரில்லை; நான் கூவியழைக்கிறேன்; நீதி வழங்கப் படவில்லை. |
8
|
நான் கடக்க முடியாதபடி அவர் என் வழியில் சுவரெழுப்பினார், என் பாதைகளைக் காரிருள் சூழச் செய்தார். |
9
|
என்னிடமிருந்து என் மகிமையைப் பறித்துக் கொண்டார், என் தலையிலிருந்து மணி முடியை அகற்றி விட்டார். |
10
|
நாற்புறமும் என்னை அழிக்கிறார், நான் தொலைந்தேன்; மரத்தைப் பிடுங்குவது போல் என் நம்பிக்கையைப் பிடுங்கி விட்டார். |
11
|
என் மீது தம் சினத்தீயை மூட்டினார், என்னைத் தம் எதிரியாகக் கருதுகிறார். |
12
|
அவருடைய படைகள் திரண்டு வருகின்றன, என்னைத் தாக்க வழியமைத்தன. என் கூடாரத்தைச் சுற்றி முற்றுகையிட்டன. |
13
|
என் உடன் பிறந்தாரை என்னை விட்டு அகலச் செய்தார், எனக்கு அறிமுகமாயிருந்தவர்கள் அந்நியராயினர்; |
14
|
என் உறவினரும் நெருங்கிய நண்பரும் என்னைக் கைவிட்டனர், என் வீட்டுக்கு வந்த விருந்தினர் என்னை மறந்துவிட்டனர். |
15
|
என் வீட்டுப் பணிப்பெண்கள் என்னை அந்நியனாக எண்ணுகின்றனர், அவர்கள் கண்ணுக்கு முகமறியாதவன் ஆனேன். |
16
|
என் ஊழியனைக் கூப்பிட்டால், அவன் பதில் சொல்வதில்லை, என் வாய்திறந்து நான் அவனைக் கெஞ்ச வேண்டியுள்ளது. |
17
|
என் மூச்சை என் மனைவி கூட அருவருக்கிறாள், என் சொந்தத் தாயின் மக்களுக்கு ஓர் அழுகல் பொருளானேன். |
18
|
சிறிய குழந்தைகளும் என்னை இகழ்கிறார்கள், நான் எழுந்தால் எனக்கெதிராய்ப் பேசுகிறார்கள். |
19
|
என் உயிர் நண்பர்கள் அனைவரும் என்னை அருவருக்கின்றனர், என் அன்பைப் பெற்றவர்கள் கூட எனகெதிராய் மாறினர். |
20
|
தோலுக்குக் கீழ் என் சதை அழுகத் தொடங்குகிறது, பற்களைப் போல் எலும்புகள் தென்படுகின்றன. |
21
|
நண்பர்களே, என் மேல் இரங்குங்கள், என் மேல் இரங்குங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. |
22
|
கடவுள் செய்வது போல நீங்கள் என்னைத் துரத்துவானேன்? என்னைச் சின்னாபின்னமாக்கினீர்களே, அது போதாதா? |
23
|
நான் சொல்லப் போவதை எழுதிவைக்கவோ அவற்றை ஒரு சுவடியில் வரைந்து வைக்கவோ யார் முன் வருவார்! |
24
|
இருப்பு எழுத்தாணியாலும் ஈயத்தாலும் அது என்றென்றைக்கும் பாறையில் பொறிக்கப்படக் கூடாதா! |
25
|
என்னை மீட்பவர் உயிரோடிருக்கிறார் என்றும், இறுதியில் அவர் புவி மீது எழுந்தருள்வார் என்றும் அறிவேன். |
26
|
என் தோல் இவ்வாறு அழிந்து போன பிறகு என் சதையிலிருந்து விடுபட்டுக் கடவுளைக் காண்பேன். |
27
|
அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன், என் கண்களால் நானே பார்ப்பேன், வேறு யாரும் பாரார். என் உள்ளம் என்னுள் மயங்கிச் சோர்கிறது. |
28
|
அவனை நாம் எவ்வகையில் பின்தொடர்ந்து விரட்டலாம், அதற்கு என்ன காரணம் கற்பிக்கலாம்?' என்பீர்களாகில், |
29
|
நீங்கள் முதற்கண் வாள் தரும் தண்டனையைக் கொணரும்; தீர்வை என்று ஒன்றுண்டு என நீங்கள் அறியவேண்டும்." |