Indian Language Bible Word Collections
Job 13:10
Job Chapters
Job 13 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 13 Verses
1
|
இதோ, இவற்றையெல்லாம் நான் கண்ணால் கண்டேன், என் காதால் கேட்டுப் புரிந்துகொண்டேன். |
2
|
நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கிறேன், உங்களுக்கு நான் தாழ்ந்தவனல்ல. |
3
|
ஆயினும் எல்லாம் வல்லவரிடம் நான் பேச விரும்புகிறேன், கடவுளோடு வழக்காட நான் ஆவலாயிருக்கிறேன். |
4
|
நீங்களோ பொய்களைப் புனைகிறவர்கள், நீங்கள் அனைவரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள். |
5
|
நீங்கள் பேசாமல் இருந்தாலே நலமாயிருக்கும்! அதுவே உங்களுடைய ஞானம் என்பேன்! |
6
|
இப்பொழுது எனது நியாயத்தைக் கேளுங்கள், என் உதடுகளின் வழக்காடலைக் கவனியுங்கள். |
7
|
கடவுள் பேரால் நீங்கள் பொய் பேசுவீர்களோ? அவருக்காக வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ? |
8
|
அவர் சார்பில் ஓரவஞ்சனை காட்டுவீர்களோ? கடவுளுக்காக நீங்கள் வழக்காடுவீர்களோ? |
9
|
அவர் உங்களை ஆராய்வது உங்களுக்கு நன்மையாய் இருக்குமோ? மனிதரை ஏமாற்றுவது போல் அவரையும் ஏமாற்றுவீர்களோ? |
10
|
மறைவிலே நீங்கள் ஓரவஞ்சனை காட்டினாலும், அவர் உங்களைக் கண்டிக்காமல் விடவே மாட்டார். |
11
|
அவருடைய மகிமை உங்களைத் திகிலடையச் செய்யாதோ? அவரைப்பற்றிய நடுக்கம் உங்களை ஆட்கொள்ளாதோ? |
12
|
உங்களுடைய மூதுரைகள் சாம்பலையொத்த பழமொழிகளே, உங்கள் எதிர் வாதங்கள் களிமண் போன்ற எதிர் வாதங்கள். |
13
|
பேசாமலிருங்கள், நான் பேசுவேன், என்ன வந்தாலும் வரட்டும். |
14
|
துணிந்து என் உடலை ஈடாக வைப்பேன், என் உயிரையே பணயமாக வைப்பேன். |
15
|
அவர் என்னைக் கொல்லலாம், நான் மனந் தளரமாட்டேன்; என் வழிகள் குற்றமற்றவையென அவரது கண் முன் எண்பித்துக் காட்டுவேன். |
16
|
கடவுட் பற்றில்லாதவன் அவர் முன்னிலையில் வரமாட்டான்; இந்த என் உறுதியே எனக்கு மீட்பாக இருக்கும். |
17
|
என் சொற்களைக் கூர்ந்து கேளுங்கள், நான் அறிவிக்கப்போவது உங்கள் செவியில் ஏறட்டும். |
18
|
இதோ, என் வழக்கை நான் எடுத்துரைக்கப் போகிறேன், என் வழக்கே வெற்றி பெறும் என்றறிவேன். |
19
|
என்னோடு வழக்காட வருபவன் யார்? அப்போது நான் நாவடங்கி உயிர் துறப்பேன். |
20
|
எனக்கு இரண்டே கோரிக்கைகளைத் தந்தருளும், அப்போது உம் முகத்தினின்று நான் ஒளியமாட்டேன். |
21
|
தண்டிக்கும் உமது கையை என் மேலிருந்து எடுத்துக் கொள்ளும், உம்மைப்பற்றிய திகிலால் நான் நிலை கலங்கச் செய்யாதேயும். |
22
|
அதன் பிறகு என்னைக் கூப்பிடும், நான் பதில் சொல்கிறேன்; அல்லது நான் பேசுகிறேன், நீர் மறுமொழி கூறும். |
23
|
என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் பாவத்தையும் எனக்குக் காட்டும். ஏன் உமது முகத்தை நீர் மறைத்துக் கொள்கிறீர்? |
24
|
என்னைப் பகைவனாக நீர் கருதுவதேன்? |
25
|
காற்றில் சிக்கிய சருகினிடம் உம் ஆற்றலைக் காட்டுவீரா? காய்ந்த துரும்பைத் துரத்திச் செல்வீரோ? |
26
|
கசப்பான தீர்ப்புகளை எனக்கெதிராய் நீர் எழுதுகிறீர், என் இளமையின் அக்கிரமங்களை என் மேல் சுமத்துகிறீர். |
27
|
என் கால்களை நீர் தொழுவில் மாட்டுகிறீர், என் வழிகளையெல்லாம் வேவு பார்க்கிறீர்; என் அடிச்சுவடுகள் மேலும் கண்ணாயிருக்கிறீர். |
28
|
நானோ அழுகிப் போகிற பொருள் போலவும், அந்துப் பூச்சி தின்ற ஆடைபோலவும் அழிந்துபோகிறேன். |