அவருக்கு ஏழாயிரம் ஆடுகளும் மூவாயிரம் ஒட்டகங்களும் ஐந்நூறு ஏர் மாடுகளும் ஐந்நூறு பெட்டைக் கழுதைகளும் இருந்தன. மேலும் அவரிடம் பல ஊழியர்களும் வேலை செய்து வந்தனர். கீழ்த்திசை நாடுகளின் அனைவருள்ளும் அவரே பெரியவராக இருந்தார்.
ஒவ்வொரு முறையும் விருந்து முடிந்த பிறகு, யோபு தம் மக்கள் ஒருவேளை ஏதேனும் பாவஞ் செய்து தங்கள் உள்ளத்தில் கடவுளைப் பழித்துரைத்திருக்கக் கூடும் என்று தமக்குள் சொல்லிக்கொண்டு, அவர்களை அழைப்பித்துப் பரிசுத்தப்படுத்தி விடியற்காலையில் எழுந்து அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் தகனப்பலிகளைச் செலுத்துவார். இவ்வாறே யோபு தம் வாழ்நாட்களில் செய்துவந்தார்.
அவனையும் அவன் வீட்டையும் அவன் உடைமைகள் அனைத்தையும் சுற்றி எப்பக்கமும் நீர் காவல் போடவில்லையோ? அவன் மேற்கொள்ளும் வினைகளை நீர் ஆசீர்வதிக்கவில்லையோ? அவன் உடைமைகளும் இந்நாட்டில் ஏராளமாக உள்ளனவே!
ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "இதோ, அவன் உடைமைகள் எல்லாம் உன் கையில் இருக்கின்றன; அவன் மேல் மட்டும் உன் கையை நீட்டாதே" என்றார். உடனே, சாத்தான் ஆண்டவரின் திருமுன் இருந்து புறப்பட்டான்.
அவ்வேளையில் சபேயர் அவற்றின் மேல் பாய்ந்து எல்லாவற்றையும் ஓட்டிக் கொண்டு போனதுமல்லாமல், வேலைக்காரரையும் வாளால் கொன்று போட்டு விட்டார்கள்; நான் ஒருவனே தப்பிப் பிழைத்து, இதை உமக்கு அறிவிக்க ஒடிவந்தேன்" என்றான்.
இவன் சொல்லி வாய் முடூ முன் வேறொருவன் வந்து, "கடவுளின் நெருப்பு வானத்திலிருந்து விழுந்து ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்து விட்டது; நான் ஒருவனே தப்பிப் பிழைத்து இதை உமக்கு அறிவிக்க ஒடி வந்தேன்" என்றான்.
இவன் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இன்னொருவன் வந்து, "கல்தேயர் மூன்று கூட்டமாய் வந்து ஒட்டகங்களைக் கவர்ந்து ஓட்டிச் சென்று விட்டார்கள்; வேலைக்காரர்களையும் வாளால் கொன்று போட்டார்கள்; நான் ஒருவனே தப்பிப் பிழைத்து இதை உமக்கு அறிவிக்க ஓடி வந்தேன்" என்றான்.
அப்போது இதோ பாலைநிலத்திலிருந்து மாபெரும் சூறாவளி எழுந்து வந்து வீட்டின் நான்கு மூலைகளிலும் மோதவே, வீடு இடிந்து உம் பிள்ளைகள்மேல் விழுந்தது; அவர்கள் அங்கேயே மாண்டு போயினர்; நான் ஒருவனே தப்பிப் பிழைத்து இதை உமக்கு அறிவிக்க ஓடி வந்தேன்" என்றான்.