யூதாவின் அரசனாகிய யோசியாசின் மகன் யோவாக்கீமுடைய நான்காம் ஆண்டில் எரெமியாஸ் இறைவாக்கினர் சொன்ன வார்த்தைகளை நேரியாஸ் மகனாகிய பாரூக் ஓலைச் சுருளில் எழுதிய பின்னர், அவருக்கு எரெமியாஸ் சொன்ன வாக்கு இதுவே:
உனக்குச் சொல்லும்படி ஆண்டவர் அதை என்னிடம் கூறினார்: ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் கட்டினதையே இடிக்கிறோம்; நாம் நட்டதையே பிடுங்குகிறோம்; அதாவது, இந்த நாடு முழுவதையும் அழிக்கிறோம்.
நீ பெரிய காரியங்களை உனக்கெனத் தேடுகிறாயோ? தேடாதே; ஏனெனில், இதோ நாம் எல்லா மனிதர் மேலும் தீமை வரச் செய்வோம்; ஆனால் நீ எங்கே போனாலும், அவ்விடத்திலெல்லாம் உன் உயிரைக் காப்பாற்றுவோம், என்கிறார் ஆண்டவர்" என்றார்.