ஓசியாஸ் மகன் அசாரியாசும், காரை மகன் யோகானானும், இறுமாப்புக் கொண்ட பிறரும் எரெமியாசை நோக்கி, "நீ பொய் சொல்லுகிறாய்; எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களிடம், 'நீங்கள் எகிப்தில் குடியிருக்க எண்ணி, அங்கே போக வேண்டாம்' என்று சொல்லுவதற்காக உன்னை அவர் அனுப்பவில்லை;
ஆண்கள், பெண்கள், சிறுவர், அரசிளம் பெண்கள் ஆகியோரையும்- சாப்பான் மகனான அயிக்காமின் மகன் கொதோலியாசின் பொறுப்பில் சேனைத் தலைவன் நபுஜார்தான் விட்டுச் சென்ற யாவரையும், எரெமியாஸ் இறைவாக்கினரையும், நேரியாஸ் மகன் பாரூக் என்பவனையும் காரை மகன் யோகானானும், மற்றப் படைத் தலைவர்களும் கூட்டிக் கொண்டு,
எகிப்து நாட்டுக்குப் போனார்கள்; ஏனெனில் அவர்கள் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள்: எகிப்துக்கு வந்து தப்னீஸ் என்னுமிடத்தில் குடியேறினார்கள்.
பிறகு அவர்களை நோக்கி, 'இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் நம்முடைய ஊழியனாகிய நபுக்கோதனசாருக்குச் சொல்லியனுப்பி வரச் செய்வோம்; நாம் மறைத்து வைத்த இந்தக் கற்கள் மேல் அவனுடைய அரியணையை அமைக்கச் செய்வோம்; அவன் தனது அரசகுடையை அவற்றின் மேல் விரிப்பான்.
அவன் வந்து எகிப்து நாட்டைத் தாக்கி அழிப்பான்; எவன் சாவுக்குரியவனோ அவன் சாவுக்கும், எவன் அடிமைத்தனத்திற்கு உரியவனோ அவன் அடிமைத்தனத்திற்கும், எவன் வாளுக்குரியவனோ அவன் வாளுக்கும் ஆளாக்கப்படுவான்.
மேலும் அவன் எகிப்து நாட்டின் தெய்வங்களுடைய கோயில்களைத் தீக்கிரையாக்கி, அவற்றில் இருக்கும் தெய்வங்களையும் சிறைபிடித்துக் கொண்டு போவான்; இடையன் தன் போர்வையை உதறுவது போல், எகிப்து நாட்டை உதறி விட்டு அமைதியாய்த் திரும்பிப் போவான்.
எகிப்து நாட்டிலிருக்கும் சூரிய பகவான் கோயிலின் தூண்களை உடைத்துப் போடுவான்; எகிப்து நாட்டுத் தெய்வங்களின் கோயில்களை நெருப்பினால் சுட்டெரிப்பான்' என்று சொல்" என்பதாம்.