உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சாட்சியாய் இருக்கும்; உங்கள் சதையைத் தின்று விடும். இறுதி நாளுக்காக நீங்கள் உங்களுக்கென நெருப்பைத் தான் குவித்து வைத்திருக்கிறீர்கள்.
ஆகவே சகோதரர்களே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையாயிருங்கள். பயிரிடுபவனைப் பாருங்கள். நிலத்தில் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன் மாரியும் பின் மாரியும் வருமளவும் பொறுமையோடு காத்திருக்கிறான்.
இத்தகைய மனவுறுதியுள்ளவர்களைப் பேறு பெற்றவர்கள் என்கிறோம். யோபின் மன உறுதியைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் அவருக்கு என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆண்டவர் மிகுந்த இரக்கமும் தயவுமுள்ளவர் என்று அறிந்திருக்கிறீர்கள்.
குறிப்பாக, என் சகோதரர்களே, ஆணையிடாதீர்கள். விண்ணுலகின் மீதோ மண்ணுலகின் மீதோ, வேறெதன் மீதோ ஆணையிட வேண்டாம். நீங்கள், ஆம் என்றால் ஆம் என்றிருக்கட்டும்; இல்லை என்றால் இல்லை என்றிருக்கட்டும். இப்படிச் செய்தால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
அவன், பாவம் செய்தவனாயிருந்தால், மன்னிப்புப் பெறுவான். ஆகவே, ஒருவர்க்கொருவர் பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் செபியுங்கள்; அப்போது குணமடைவீர்கள். நீதிமான் முழு உள்ளத்தோடு செய்யும் மன்றாட்டு ஆற்றல் மிக்கது.
எலியாஸ் நம்மைப் போல் எளிய நிலைக்குட்பட்ட மனிதர் தான். ஆயினும், மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாகச் செபித்தார். மூன்று ஆண்டு ஆறு மாதங்கள் மழையில்லாது போயிற்று.