பிறர் பொருள்மீது ஆசை வைக்கிறீர்கள்; அதைப் பெறாததால், கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; ஆசைப்படுவதை அடைய முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். ஆசைப்படுவதை ஏன் அடைய முடியவில்லை? இறைவனிடம் கேட்காததால் தான்.
நாம் அதற்கேற்ப வாழ நமக்குத் தேவைக்கு மேலாகவே அருளையும் வழங்குகிறார்; ஆகவேதான், " செருக்குற்றவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்; தாழ்ச்சியுள்ளவர்களுக்கோ அருளை அளிக்கிறார்" என்று எழுதியுள்ளது.
அலகையை எதிர்த்து நில்லுங்கள், அது ஓடி விடும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்; இருமனத்தோரே, இதயங்களைப் புனிதப்படுத்துங்கள்.
சகோதரர்களே, ஒருவரைப்பற்றியொருவர் அவதூறு பேசாதீர்கள். தன் சகோதரனுக்கு எதிராக அவதூறு பேசுபவன் அல்லது தீர்ப்பிடுகிறவன் திருச்சட்டத்திற்கு எதிராகவே பேசுகிறான். அச்சட்டத்திற்கே தீர்ப்பிடுகிறான். சட்டத்திற்கு நீ தீர்ப்பிட்டால், நீ அதை நிறைவேற்றுபவன் அல்ல; தீர்ப்பிடுகிறவன் ஆகிறாய்.