என்னுடைய நண்பருக்கொரு கவிதை பாடுவேன், அவரது திராட்சைத் தோட்டத்தைக் குறித்துக் காதல் பாட்டொன்று இசைப்பேன். வளம் நிறைந்த குன்று ஒன்றின் மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.
அவர் நன்றாக அதைக் கொத்தி விட்டுக் கற்களை அகற்றி, தேர்ந்தெடுத்த திராட்சைக் கொடிகளை அதில் நட்டு வைத்தார்; அதன் நடுவில் கோபுரம் ஒன்றையும் கட்டினார், அதில் திராட்சை பிழியும் ஆலையையும் அமைத்தார்; நற் திராட்சைக் குலைகள் காய்க்குமெனக் காத்திருந்தார், காட்டுத் திராட்சைக் குலைகளே காய்த்தன.
இனி நமது திராட்சைத் தோட்டத்திற்கு நாம் செய்யப்போவதைக் கேளுங்கள்: நாமே அதன் வேலியைப் பிடுங்கியெறிவோம், அதுவோ பிறரால் சூறையாடப்படும்; அதன் சுற்றுச் சுவரை நாம் தகர்த்திடுவோம், அதுவோ மனிதர் கால்களில் மிதிபடும்.
நாம் அதனைப் பாழாக்குவோம், கிளைகள் கழிக்கப்படா, பூமி கொத்தப்படாது; முட்களும் முட்புதர்களுமே அதில் வளரும்; அதன் மீது மழை பெய்யாதிருக்கும்படி மழை மேகங்களுக்கு நாம் கட்டளை தருவோம்.
வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே, பிறருக்கெனக் கொஞ்சமும் இடமில்லாதபடி எல்லை வரை வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! பரந்த இந்த நாட்டின் நடுவிலே நீங்கள் மட்டுமே வாழ இருப்பதாய் எண்ணமோ?
அவர்களுடைய விருந்துகளில் கிண்ணாரம், வீணை, தம்புரு, குழல், திராட்சை இரசம் எல்லாமுண்டு; ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைப்பதுமில்லை, அவருடைய கைவேலைகளை அவர்கள் காண்பதுமில்லை.
ஆதலால் பாதாளக் குழி தன் பசியை வளர்த்துக் கொண்டது, அளவு கடந்து தன் வாயைப் பிளந்துள்ளது; அதற்குள் வலிமையுடையவர்களும் பொது மக்களும் உயர்ந்தோரும் பெரியோரும் ஒருங்கே இறங்குகிறார்கள்.
அவர் விரைந்து வரட்டும், நாம் பார்க்கும்படி தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்; இஸ்ராயேலின் பரிசுத்தருடைய நோக்கம் நிறைவேறட்டும், அதுவும் நடக்கட்டும், நாம் அறிந்துகொள்வோம்" என்று சிலர் சொல்லுகிறார்கள்;
ஆதலால் ஆண்டவரின் சினம் அவருடைய மக்களுக்கு எதிராக மூண்டெழுந்தது; அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார்; மலைகள் நடுங்கின; அவர்களுடைய உயிரற்ற உடல்கள் குப்பை போல தெருக்களின் நடுவில் கிடந்தன; இதெல்லாம் செய்தும் அவர் சினம் ஆறவில்லை; நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
அவர்களுடைய அம்புகள் கூராயுள்ளன, விற்கள் நாணேறியே இருக்கின்றன. அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கல் போல கெட்டியானவை; அவர்களுடைய தேர்களின் சக்கரங்கள் புயற் காற்றைப் போல வேகமானவை.
அவர்களுடைய கர்ச்சிப்பு சிங்கம் சீறுவது போலிருக்கிறது, இளஞ்சிங்கங்களைப் போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்; உறுமிக் கொண்டு பாய்ந்து தங்கள் இரையைப் பிடிப்பார்கள்; இரை தூக்கிப் போய்விடுவர், யாரும் அதை மீட்க முடியாது.
கடலின் பேரிரைச்சல் போல் அந்நாளில் அவர்கள் கர்ச்சித்து உறுமுவார்கள்; இந்த உலகத்தை ஏறெடுத்துப் பார்த்தாலோ, இதோ, எங்கும் இருளும் துன்பமுமே நிறைந்திருக்கும். மேகங்கள் ஒளியை இருளச் செய்யும்.