ஆதலால் என் அடிவயிறு கலங்கிக் குமுறுகிறது, பிள்ளைபெறும் பெண்ணின் வேதனைக் கொத்த வேதனை என்யையும் வாட்டுகின்றது; உடல் குன்றினேன், செவிடன் போல் ஆனேன்; திகில் கொண்டேன், குருடன்போல் ஆனேன்;
இருவர் இருவராய் அணிவகுத்த குதிரைப் படை வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் வருவதையும் அந்தக் காவலன் காணும்போது, உற்றுக் கேட்கட்டும்; மிகவும் கவனமாய் உற்றுக் கேட்கட்டும்."
அப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தவன் கூச்சலிட்டான்: "ஆண்டவனே, பகல் முழுதும் காவல் மாடத்தில் நான் நின்றுகெண்டிருக்கிறேன்; இரவெல்லாம் காவல் காக்கும் வேலையில் நான் கருத்தாய் இருக்கிறேன்.
இதோ, இருவர் இருவராய் அணிவகுத்த குதிரைப்படை வந்து கொண்டிருக்கிறது!" தொடர்ந்து அவன் எனக்குச் சொன்னது இதுவே: "விழுந்தது, பபிலோன் வீழ்ச்சியுற்றது; அதனுடைய தெய்வங்கள் படிமங்கள் யாவும் தரையில் விழுந்து நொறுங்கி விட்டன."
போரடிக்கப்பட்ட களத்தில் அகப்பட்டவர்களே, தூற்றப்பட்ட களத்தில் சிதறியவர்களே, இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரிடமிருந்து நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
தூமாவைப் பற்றிய இறைவாக்கு: "சாமக்காவலனே, இரவில் நேரம் எவ்வளவு? சாமக்காவலனே, இரவில் நேரம் எவ்வளவு?" என்றொருவன் சேயீரிலிருந்து என்னை நோக்கிக் கத்துகிறான்.