அசீரியாவின் அரசனான சார்கோன் என்பவனால் அனுப்பப்பட்டு, அசோத் பட்டணத்துக்கு வந்த சேனைத் தலைவனாகிய தார்த்தான் என்பவன் போரிட்டு அந்தப் பட்டணத்தைப் பிடித்த அந்த ஆண்டில் -
அந்தக் காலத்திலேயே- ஆமோஸ் என்பவனின் மகனான இசையாஸ் வாயிலாக ஆண்டவர் சொல்லியிருந்தார்: "நீ உன் இடையிலிருந்து சாக்கு உடையை அகற்றிவிட்டு, உன் கால்களிலிருந்து செருப்புகளையும் கழற்றி விட்டு நடமாடு" என்றார்; அவரும் அவ்வாறே செய்து, ஆடையின்றியும் வெறுங்காலோடும் நடமாடி வந்தார்.
(எவ்வாறெனில்) அசீரியாவின் அரசன் எகிப்தியரையும் எத்தியோப்பியரையும் சிறைபிடித்து, இளைஞரையும் முதியோரையும் ஆடையின்றியும் வெறுங்காலோடும் மறைக்கப்படாத பிட்டத்தினராய் நாடு கடத்துவான். இது எகிப்துக்கு மானக்கேடாய் இருக்கும்.
அந் நாளில் இந்தக் கடற்கரை நாட்டில் வாழ்கிறவர்கள், 'இதோ, யாரிடத்தில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோமோ, அசீரிய அரசனிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்படி யாரிடத்தில் உதவி தேடி ஓடினோமோ, அவர்களுக்கு நேர்ந்த கதி இதுவானால், நாம் எவ்வாறு தப்பிக்கப் போகிறோம்' என்பார்கள்."