அந்நாளில், நீ இவ்வாறு சொல்லுவாய்: "ஆண்டவரே, நான் உமக்கு நன்றி கூறுகிறேன், ஏனெனில் நீர் என் மீது சினங்கொண்டாலும், இப்பொழுது உமது சினம் தணிந்து விட்டது, நீரும் எனக்கு ஆறுதல் தந்தீர்.
அந்நாளில் நீங்கள் இவ்வாறு சொல்லுவீர்கள்: "ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள், அவரது பெயரைப் போற்றிப் புகழுங்கள்; புறவினத்தார்க்கு அவர் செயல்களை அறிக்கையிடுங்கள், அவர் பெயர் உயர்ந்ததெனப் பறைசாற்றுங்கள்.