இரண்டு நாளைக்குப் பிறகு நமக்கு அவர் புத்துயிரூட்டுவார், மூன்றாம் நாள் அவர் நம்மை எழுப்பி விடுவார்; அதன் பின் அவர் முன்னிலையில் நாம் வாழ்ந்திடுவோம். ஆண்டவரைப் பற்றி அறிந்திடுவோம், அவரைப் பற்றி அறிய முனைந்திடுவோம்; அவருடைய வருகை விடி வெள்ளிப் போலத் திண்ணமானது, மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்" என்றார்கள்.
எப்பிராயீமே, உன்னை நாம் என்ன செய்வோம்? யூதாவே, உன்னை நாம் என்ன செய்வோம்? விடியற்காலையின் மேகம் போலும், கதிரவனைக் கண்ட பனி போலும் உங்கள் அன்பு இருக்கிறதே!
ஆதலால் தான் இறைவாக்கினர்களைக் கொண்டு நாம் அவர்களை வெட்டி வீழ்த்தினோம்; நமது வாய் மொழிகளால் அவர்களைக் கொன்றொழித்தோம், நமது தீர்ப்பு வெட்ட வெளிச்சம் போல வெளிப்படுகிறது.