நீ நன்மை செய்தால் உனக்கு வெகுமதி கிடைக்கும்; தீமை செய்தால் உடனே பாவம் உன் வாயிலில் வந்து பதுங்கி நிற்குமன்றோ? அதன் ஆசை உன் மேல் இருக்கும்; நீயோ அதை அடக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
ஒரு நாள் காயின் தன் தம்பி ஆபேலைப் பார்த்து: வெளியே போகலாம் வா என்றான். வயல்வெளியில் இருந்த போது காயின் தன் தம்பி ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்று விட்டான்.
நீ என்ன செய்தாய்? இதோ கேள்; பூமி தன் வாயைத் திறந்து, உன் கையால் சிந்திய உன் தம்பியின் இரத்தத்தை உட்கொண்டது. ஆகவே, இன்று முதல் நீ அந்தப் பூமியில் சபிக்கப்பட்டவனாய் இருப்பாய்.
இதோ, இந்நாட்டிலிருந்து என்னை இன்று துரத்தி விடுகிறீர். இனி நான் உம் கண்ணிற்கு மறைந்தவனாய்ப் பூமியில் நிலையற்றவனும் நாடோடியுமாய் இருப்பேன். அப்படியானால் என்னைக் காணும் எவனும் என்னைக் கொல்வானே என்றான்.
ஆண்டவர்: அப்படி நடக்கவே நடக்காது; காயினைக் கொல்பவன் ஏழு மடங்கு பழியைச் சுமப்பான் என்று காயினுக்குச் சொல்லி, அவனைக் கண்டு பிடிப்பவன் எவனும் அவனைக் கொல்லாதபடிக்கு அவனுக்கு ஓர் அடையாளம் இட்டார்.
பின் காயின் தன் மனைவியோடு சுடி வாழ்ந்தான். அவள் கருத்தரித்து ஏனோக்கைப் பெற்றாள். அப்போது காயின் ஒரு நகரை எழுப்பி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை இட்டான்.
இலாமேக் தன் மனைவியராகிய ஆதாளையும் செல்லாளையும் நோக்கி: இலொமேக்கின் மனைவியரே, என் வார்த்தையைக் கேளுங்கள்; என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்: என்னைக் காயப்படுத்திய ஒரு மனிதனை நான் கொன்றேன்; என்னைத் துன்புறுத்திய ஒரு இளைஞனையும் சாகடித்தேன்;
மீண்டும் ஆதாம் தன் மனைவியோடு கூடிவாழவே, அவள் ஒரு மகனைப் பெற்றாள்: காயின் கொலை புரிந்த ஆபேலுக்குப் பதிலாகக் கடவுள் எனக்கு வேறொரு மகனைத் தந்தருளினார், என்று சொல்லி, அவள் அவனுக்குச் சேத் என்று பெயரிட்டாள்.