ஈசாக் முதியவனானதனால் அவன் கண்கள் கெட்டுப் பார்வை அற்றுப் போயின. ஒரு நாள் அவன் தன் மூத்த மகன் எசாயூவைக் கூப்பிட்டு, என் மகனே, என்று அழைக்க எசாயூ: இதோ வருகிறேன், என்று பதில் கூறினான்.
ஆகையால், உன் ஆயுதங்களாகிய அம்புக் கூட்டையும் வில்லையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்று, வேட்டையில் அகப்பட்டதைக் (கொண்டுவந்து) எனக்கு விருப்பமான சமையலை நீ அறிந்துள்ளபடி சமைத்து,
நீ போய் வேட்டையாடி, வேட்டையில் கிடைத்ததைச் சமைத்துக் கொண்டு வந்தால், நான் அதை உண்டு, எனக்குச் சாவு வருமுன் ஆண்டவர் திரு முன் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றார்.
ஒரு வேளை என் தந்தை என்னைத் தடவிப் பார்த்து அதைக் கண்டு பிடித்துக் கொள்வாராயின், அவரை நான் ஏமாற்றத் துணிந்தேனென்று நினைப்பாரே; அப்படியானால், என்மேல் ஆசீரையல்ல சாபத்தையே நான் வருவித்துக் கொள்வேனென்று அஞ்சுகிறேன் என்றான்.
ஈசாக் மறுபடியும் தன் மகனை நோக்கி: மகனே, இது உனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அகப்பட்டது என, அவன்: ஆண்டவர் அருளால் நான் விரும்பியது உடனே எனக்குக் கிடைத்தது என்று மறுமொழி சொன்னான்.
அப்பொழுது ஈசாக்: நீ பிடித்த வேட்டையைச் சமைத்திருக்கிறாயே, அதைக் கொண்டு வா, மகனே! அதன் பின்னே நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றான். அப்படியே முன் வைக்கப்பட்ட கறியை உண்டான். உண்டு முடித்த பின், (யாக்கோபு) தன் தந்தைக்குத் திராட்சை இரசமும் கொணர்ந்து கொடுத்தான். அதைக் குடித்து முடித்ததும், (ஈசாக்) மகனை நோக்கி:
அவன் கிட்டப் போய் அவனை முத்தமிட, ஈசாக் அவனது ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து: இதோ, என் மகன் விடுகின்ற மணம் ஆண்டவர் ஆசீர்வதித்த விளை நிலத்தின் வாசனை போல் இருக்கின்றதே!
நாடுகள் உனக்குப் பணிபுரியவும், மக்கள் உன்னை வணங்கவும் கடவர். நீ உன் சகோதரர்களுக்குத் தலைவனாய் இரு. உன் தாயாருடைய மக்களும் உனக்குமுன் பணியக் கடவார்கள். உன்னைச் சபிப்பவன் சபிக்கப்பட்டவனாகவும், உன்னை ஆசீர்வதிப்பவன் ஆசிகளால் நிறைந்தவனாகவும் இருக்கக்கடவான் என்று ஆசீர்வதித்தான்.
போனவுடனே எசாயூ வந்து, தான் சமைத்திருந்த வேட்டைப் பொருட்களைத் தந்தைக்கு முன் வைத்து: அப்பா, எழுந்திரும். உமது மகனுடைய வேட்டைப் பொருட்களை உண்ணும். பிறகு என்னை ஆசிர்வதியும் என்றான்.
ஈசாக் மிகவும் வியப்புற்று, அதிக ஆச்சரியம் அடைந்தவனாய் அப்படியானால் வேட்டையாடிச் சமைத்தவற்றை என்னிடம் கொண்டு வந்தவன் யார்? நீ வருமுன் அவை எல்லாவற்றையும் நான் உண்டு, அவனை ஆசிர்வதித்தேன். அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே இருப்பான் என்றான்.
அதைக் கேட்ட எசாயூ யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனென்றால், அவன் இரு முறை என்னை வஞ்சித்துள்ளான். மூத்த மகனுக்குரிய என் உரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்கு உரிய ஆசீரையும் கவர்ந்து விட்டான் என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி: நீர் எனக்காக வேறு ஓர் ஆசிர் வைத்துக் கொள்ளவில்லையோ என்று கேட்டான்.
அதற்கு, ஈசாக்: நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் சகோதரர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனைத் தானியத்தினாலும் திராட்சை இரசத்தினாலும் நிரப்பியுள்ளேன். அவை தவிர என் மகனே, நான் உனக்குச் செய்யத் தக்கது என்ன என, எசாயூ அவனை நோக்கி:
நீ உன் வாளினாலே வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்குப் பணிபுரிவாய். ஆனால் ஒரு காலம் வரும். (அப்பொழுது) நீ அவனுடைய அதிகாரத்தின் நுகத்தடியை உன் கழுத்தினின்று உதறித் தள்ளி விடுவாய் என்றான்.
யாக்கோபு தந்தையின் ஆசிரைப் பெற்றிருந்ததினால் (அதுமுதல்) எசாயூ அவன் மீது தீராப் பகை வைத்திருந்தான். என் தந்தைக்காகத் துக்கிக்கும் நாள் வரும்; அப்போது நான் என் தம்பி யாக்கோபைக் கொன்று விடுவேன் என்று தன் உள்ளத்தில் உறுதி பூண்டான்.
தனக்கு விரோதமாய் நீ செய்ததை அவன் மறந்து கோபம் தீர்ந்த பின் நான் உனக்குச் சொல்லியனுப்பி, உன்னை அங்கிருந்து இவ்விடத்திற்கு அழைத்துக் கொள்வேன். நான் ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் ஏன் இழந்து போக வேண்டும் என்றாள்.
பின் இரெபேக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் புதல்வியர் பொருட்டு என் வாழ்வே எனக்குச் சலிப்பாயிருக்கிறது. யாக்கோபும் இந்நாட்டுப் பெண்ணைக் கொண்டானாயின், உயிர் வாழ்ந்தும் பயனென்ன என்று சொன்னாள்.