தன்னுடைய முந்தின பயணத்தில் அவன் தெற்கிலிருந்து பெத்தெலுக்கு வந்திருந்தான். இப்பொழுதும் அவன் வந்த வழியே திரும்பிப் போய், பெத்தெலுக்கும் ஆயிக்கும் நடுவில் தான் முன்பு கூடாரம் அடித்திருந்ததும்,
அவர்கள் இருவரும் ஒன்றாய்க் குடியிருப்பதற்குப் போதுமான இடம் இல்லை. உண்மையிலே அவர்களுடைய சொத்து மிகுதியாயிருந்தமையால் அவர்கள் சேர்ந்து வாழக் கூடாமல் போயிற்று.
எனவே, ஆபிராமின் மந்தை மேய்ப்பவருக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பவருக்குமிடையே (பிணக்குகள்) உண்டாயின. அக்காலத்தில் கானானையரும் பெரேசையரும் அதே நாட்டில் குடியிருந்தனர்.
அதோ, நாடு முழுவதும் கண் முன் இருக்கிறது. தயவுசெய்து என்னை விட்டுப் பிரிந்து போ. நீ இடப்பக்கம் போனால், நான் வலப்பக்கம் போகிறேன்; நீ வலப்பக்கம் போக விரும்பினால், நான் இடப்பக்கம் செல்கிறேன் என்றான்.
இது கேட்டு லோத் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான்; யோர்தான் நதியின் இரு புறத்திலுமுள்ள இடம் முழுவதும் (நீர்) வளமுள்ளதாய் இருக்கக் கண்டான். உண்மையில் ஆண்டவர் சொதொம், கொமோரா (என்னும் நகரங்களை) அழிக்கு முன்பே, அந்நாடு ஆண்டவருடைய இன்ப வனத்தைப் போலவும், செகோர் பக்கம் செல்பவர்களுக்கு எகிப்தை போலவும் தோற்றமளிக்கும்.
ஆகையால் லோத் யோர்தான் நதியின் இரு புறத்திலுமுள்ள நாட்டைத் தேர்ந்து கொண்டு, கீழ்த்திசையை விட்டுப் புறப்பட்டான். இவ்வாறு அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் குடியிருந்தான்.
லோத் பிரிந்து போன பின்பு ஆண்டவர் ஆபிராமை நோக்கி: நீ கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் நோக்கிப் பார்.
அன்றியும் உன் சந்ததியைப் பூமியின் புழுதிப் போலப் பெருகச் செய்வோம். மனிதர்களுள் ஒருவன் பூமியின் புழுதியை எண்ணக் கூடுமாயின், அவனால் உன் சந்ததியாரையும் எண்ணக் கூடுவதாகும்.
ஆபிராம் தன் கூடாரத்தைப் பெயர்த்து எபிறோனில் இருக்கும் மாம்பிரே என்ற பள்ளத்தாக்கிற்கு அண்மையிலேயே குடியேறினான். அவ்விடத்திலும் ஆண்டவருக்கு ஒரு பீடத்தைக் கட்டினான்.