அப்பொழுது அவர்கள் ஒருவரோடொருவர்: வாருங்கள், செங்கல் அறுத்துச் சூளையிலிட்டுச் சுடுவோம் என்று பேசிக்கொண்டு, கருங்கல்லுக்குப் பதிலாகச் செங்கற்களையும், சாந்துக்குப் பதிலாகத் தாரையும் பயன் படுத்தினர்.
மேலும் அவர்கள்: வாருங்கள், நாம் நாடுகள் தோறும் சிதறிப் போகு முன்னே ஒரு நகரையும், விண்ணை முட்டும் ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் புகழ் உண்டாகச் செய்வோமாக என்று சொன்னார்கள்.
அப்பொழுது அவர்: இதோ, மக்கள் ஒரே இனமாயிருந்து ஒரே மொழி பேசி வருகிறதனாலன்றோ இதைச் செய்யத் தொடங்கினார்கள்! தாங்கள் செய்ய நினைத்ததை அவர்கள் விடாமல் எப்படியும் செய்து முடிப்பார்கள்.
பூமியெங்கும் வழங்கும் மொழிக் குழப்பம் அவ்விடத்தில் பிறந்தமையால் அதன் பெயர் பாபேல் எனப்பட்டது. ஆண்டவர் அவர்களை அவ்விடத்திலிருந்து நாடுகள் தோறும் சிதறிப் போகச் செய்தார்.
பின்னர் ஆபிராமும் நாக்கோரும் மணம் செய்து கொண்டார்கள். ஆபிராமின் மனைவியின் பெயர் சாறாயி. நாக்கோரின் மனைவிக்கு மெல்காள் என்பது பெயர். இவள் ஆரானின் மகள். இந்த ஆரான் மெல்காளுக்கும் எஸ்காளுக்கும் தந்தை.
(அக்காலத்தில்) தாரே தன் மகனான ஆபிராமையும், ஆரானுக்கு மகனான லோத் என்னும் தன்பேரனையும், தன் மருமகளும் தன் மகன் ஆபிராமின் மனைவியுமான சாறையியையும் அழைத்துக் கொண்டு, அவர்களோடு கால்தேயருடைய (நகராகிய) ஊரிலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆரான் வரை வந்து அங்கே குடியேறினர்.