இன்னும் ஓர் எடுத்துக்காட்டுச் சொல்லுகிறேன்: தந்தையின் சொத்தனைத்திற்கும் என் மகன் தலைவனாய் இருந்தாலும், சிறுவனாய் இருக்கும் வரையில், அவனுக்கும் அடிமைக்கும் வேறுபாடு எதுவும் இல்லை;
ஆனால், இப்பொழுது கடவுளை அறிந்து ஏற்றுக் கொண்டீர்கள்; சரியாய்ச் சொல்லவேண்டுமாயின், இப்பொழுது கடவுளே உங்களை அறிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்; அப்படியிருக்க வலுவற்ற வறுமை மிக்க உலகப் பூதங்களிடம் திரும்பிப் போய், அவற்றிற்கு மறுபடியும் அடிமைகளாவதற்கு நீங்கள் விரும்புவதெப்படி?
என் உடல் நிலை உங்களுக்கு இடைஞ்சலாய் இருந்தும், நீங்கள் என்னைப் புறக்கணிக்கவில்லை, வெறுத்து ஒதுக்கவில்லை. மாறாக, கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வது போல் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; ஏன், கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்வது போலவே என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
அதைப் பெரும் பேறாகவும் கருதினீர்கள்; அந்த மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால், உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுக்கத் தயங்கியிருக்க மாட்டீர்கள். உங்களைப்பற்றி இதைத் திண்ணமாகச் சொல்ல முடியும்.
முன்பு நான் குறிப்பிட்டவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானதன்று. தங்கள் மேல் நீங்களும் அதே ஆர்வம் காட்டவேண்டுமென்று அவர்கள் உங்களை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள்.
உங்கள் நடுவில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே; ஆனால், அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும்.
உங்களைப் பொறுத்த மட்டில் என்ன செய்வது என்றே எனக்கு விளங்கவில்லை. இப்பொழுதே நேரில் வந்து, உங்களோடு இருந்து, வேறு வகையாய்ப் பேசிப் பார்த்தால் நலமாயிருக்கும்.
இது ஓர் உருவகம்: இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர்; ஒன்று, சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அதனால் அடிமைத்தனத்துக்கெனப் பிள்ளைகள் பிறக்கின்றனர்;
ஏனெனில், 'பிள்ளை பெறாத மலடியே மகிழ்வாயாக! பேறுகால வேதனையுறாதவளே, துள்ளிக் குதித்து ஆர்ப்பரிப்பாயாக! வாழ்க்கைப்பட்டவளின் மக்களைவிட கைவிடப்பட்டவளின் மக்களே மிகப் பலர்' என்று எழுதியுள்ளது.