வீணாகத்தான் முடியுமா? அப்படியானால், உங்களுக்கு ஆவியானவரை அளித்து உங்களிடையே வல்லமை மிக்க செயல்களைச் செய்பவர் ஏன் அப்படிச் செய்கிறார்? நீங்கள் திருச்சட்டம் விதித்த செயல்களை நிறைவேற்றுவதால் செய்கிறாரா? நீங்கள் நற்செய்தியைக் கேட்டு விசுவசித்ததால் செய்கிறாரா?
கடவுள் புறவினத்தாரை விசுவாசத்தினால் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை மறைநூல் முன்னறிந்தே, ' புறவினத்தார் அனைவரும் உன் வழியாய் ஆசி பெறுவர் ' என்ற நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது.
சட்டம் விதித்த செயல்களையே நம்பி வாழ்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள். ஏனெனில், 'திருச்சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும் யாவற்றையும் கடைப்பிடிப்பதில் நிலைத்திராத எவனும் சபிக்கப்படுக! ' என்று எழுதியுள்ளது.
திருச்சட்டத்தினால் எவனும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவனாவதில்லை என்பதும் தெளிவு; ஏனெனில், 'விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப்பட்டவனே வாழ்வு பெறுவான்' என்று எழுதியுள்ளது.
ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் புறவினத்தார்க்குக் கிடைக்கவும். இவ்வாறு வாக்களிக்கப்பட்ட ஆவியானவரை நாம் விசுவாசத்தின் வழியாய்ப் பெற்றுக்கொள்ளவும் இப்படிச் செய்தார்.
சகோதரர்களே, உலக வழக்கிலிருந்து ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறேன்: மனிதர் செய்யும் சாதாரண உடன்படிக்கை கூட, முறைப்படி செய்து முடிக்கப்பட்டதாயின், அதை யாரும் வெறுமையாக்குவதில்லை; அதனுடன் ஒன்றையும் விட்டுவதுமில்லை.
என் கருத்து இதுவே: கடவுள் வாக்குறுதி தந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து முடித்தார்; நானூற்று முப்பது ஆண்டுகளுக்குப் பின் வந்த திருச்சட்டம், அவ்வுடன்படிக்கையைச் செல்லாததாக்கி, வாக்குறுதியை வெறுமையாக்கிவிட முடியாது.
உரிமைப் பேறாக இறைவன் தருவது திருச்சட்டத்தின் வழியாய்க் கிடைப்பதாய் இருந்தால், அது வாக்குறுதியின் வழியாய்த் தரப்படுவதன்று என்றாகிறது; ஆனால் கடவுள் அதை ஆபிரகாமுக்கு வாக்குறுதியின் வழியாகவே அருளினார்.
அப்படியானால் திருச்சட்டம் எதற்கு? குற்றங்களை முன்னிட்டு அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வாக்குறுதியைப் பெற்றுக் கொண்ட வழித்தோன்றல் வரும்வரை அது நீடிக்க வேண்டியிருந்தது. வானதூதர்களின் வழியாய் நிறுவப்பட்ட அச்சட்டம் இணைப்பாளர் ஒருவர் வழியாய்த் தரப்பட்டது.
அப்படியானால் திருச்சட்டம் கடவுளின் வாக்குறுதிகளுக்கு முரணானதா? ஒருகாலும் இல்லை. வாழ்வு அளிக்க வல்லதொரு சட்டம் தரப்பட்டிருந்தால், சட்டத்தின் வழியாய் மெய்யாகவே மனிதன் இறைவனுக்கு ஏற்புடையவனாகி இருக்கலாம்.
ஆனால், அனைத்துமே பாவத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதாக மறைநூல் சாற்றுகிறது. வாக்களிக்கப்பட்ட அப்பேறு விசுவசிப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் கிடைக்கவேண்டுமென்று இவ்வாறு ஆயிற்று.