எஸ்ரா இவ்வாறு கடவுளின் ஆலயத்தின் முன் விழுந்து அழுது இறைவனை இறைஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த இஸ்ராயேலின் ஆண், பெண், சிறுவர் யாவரும் பெருந்திரளாய் அங்குக் கூடி வருந்தி அழுதனர்.
அப்பொழுது ஏலாமின் புதல்வரில் ஒருவனான யேகியேலின் மகன் செக்கேனியாஸ் எஸ்ராவை நோக்கி, "நாங்கள் புறவினத்தாரிடமிருந்து பெண் கொண்டதால், நம் கடவுளுக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். ஆயினும், இக்காரியத்தின் மட்டில் இஸ்ராயேலருக்கு இன்னும் நம்பிக்கை உண்டு.
ஆகவே ஆண்டவரின் திருவுளத்திற்கும், அவர் கட்டளைகளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு அப்பெண்கள் அனைவரையும், அவர்கள் வயிற்றில் பிறந்த மக்களையும் அகற்றிப் போடுவோம் என்று நம் கடவுளாகிய ஆண்டவரோடு உடன்படிக்கை செய்வோம்; திருச்சட்டத்திற்கு ஏற்ற முறையில் நடப்போம்.
அதைக் கேட்டு எஸ்ரா எழுந்து, குருக்களுக்கும் லேவியர்களுக்கும் இஸ்ராயேலர் அனைவருக்கும் தலைவராய் இருந்தோர் அவ்வாறே செய்யுமாறு ஆணையிடச் செய்தார். அவர்களும் அவ்வாறே ஆணையிட்டனர்.
பின் எஸ்ரா கோவில் முகப்பினின்று எழுந்து எலியாசிபின் மகன் யோகனானின் அறைக்குள் புகுந்தார். அங்கு அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தோருடைய பாவத்தின் பொருட்டு அழுது புலம்பி, உண்ணாமலும் குடியாமலும் இருந்தார்.
அவர்களில் எவனாவது மூன்று நாட்களுக்குள் வராமலிருந்தால், மக்கள் தலைவர்கள், மூப்பர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி அவனுடைய உடைமை எல்லாம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்தவர்களின் கூட்டத்தினின்று விலக்கி வைக்கப்படுவான் என்றும் யூதாவிலும் யெருசலேமிலும் அறிக்கை விடுத்தனர்.
ஆகவே யூதா, பென்யமீன் குலத்தார் அனைவரும் மூன்று நாளுக்குள் யெருசலேமில் கூடினார்கள். ஒன்பதாம் மாதம் இருபதாம் நாள் மக்கள் எல்லாரும் கடவுளுடைய ஆலய வளாகத்தில் தங்கள் பாவத்தின் காரணமாகவும் அஞ்சி நடுங்கிக் கொண்டு நின்றனர்.
இப்போதோ நீங்கள் உங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவர் திருவுளப்படி நடங்கள். மேலும் புறவினத்தாரையும் அவர்கள் நடுவினின்று நீங்கள் கொண்ட மனைவியரையும் விட்டு விலகியிருங்கள்" என்றார்.
ஆயினும், மக்களின் எண்ணிக்கை மிகுதியானதாலும், இது மாரிக்காலமானதால் வெளியே நிற்க எங்களால் கூடாததினாலும், நாங்கள் கட்டிக்கொண்ட பாவம் பெரும்பாவமாய் இருப்பதாலும், இது ஓரிரு நாளில் முடியக் கூடிய வேலை அன்று.
எனவே மக்கள் அனைவருள்ளும் சிலரைத் தலைவர்களாக நியமிக்க வேண்டும். புறவினப் பெண்களைக் கொண்டவர் அனைவரும் தத்தம் நகரப் பெரியோர் முன்னும் நீதிபதிகள் முன்னும் குறித்த நேரத்தில் நீதி விசாரணைக்கு வர வேண்டும். இப்பாவத்தின் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக் கனல் நம்மை விட்டு விலகும் வரை விசாரணை நடக்க வேண்டும்" என்றனர்.
அவர்களது விண்ணப்பத்திற்கு ஏற்றபடி அசாயேலின் மகன் யோனத்தானும், தேக்குவேயின் மகன் யாவாசியாவும் இதற்காக நியமிக்கப்பட்டனர். லேவியரான மெசொல்லாமும் செபெதாயியும் அவர்களுக்கு உதவியாக நியமிக்கப்பட்டனர்.
அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தோர் இவ்வாறே செய்து வந்தனர். குரு எஸ்ராவும் குலத் தலைவர்களும் தங்கள் முன்னோரின் குடும்ப வரிசைப்படியும் பெயர் வரிசைப்படியும் பத்தாம் மாதம் முதல் நாள் விசாரணைக்காக அமர்ந்தனர்.